For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு

இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார்.

லண்டனில் தொடங்கியுள்ள 5வது வருடாந்திர யுகே- இந்தியா லீடர்ஷிப் மாநாடு நடக்கிறது. பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி இந்தியா- பிரிட்டன் இடையே இந்த உயர்நிலை கூட்டம் தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

UK-India Week 2018: Umang Bedi and Vivek Oberoi on Future of creativity in India

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார். இவருக்கு முன்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சினிமா எதிர்காலம் குறித்து பேசினார். முக்கியமாக மீடியா எப்படி எல்லாம் மாறியுள்ளது என்றார்.

டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசிய போது, நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு ஊடக செய்தியை எடுத்து பார்த்தாலும் அது அதிக பட்சம் மாநில மொழிகளில்தான் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகித செய்திகள், ஊடக விஷயங்கள் மாநில மொழிகளில்தான் இருக்கிறது. மாநில மொழிகள் இங்குதான் அதிக பங்கு. வகிக்கிறது

இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் மாநில மொழிகளில் பேசுகிறார்கள், மாநில மொழியில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதி அதற்கு பெரிய அளவில் உதவுகிறது.

2020களில் இந்தியா முழுக்க பல மொழிகளில் மக்கள் பல விஷயங்கள் நுகர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கு புரியும். அவர்கள் உங்கள் பொருளை வாங்குவார்கள்.

அதேபோல் ஊடகங்களை அரசு கவனிக்கும் வழக்கமும் இருக்கிறது. அது இரண்டு விதமான விதங்களில் மக்களை பாதிக்கிறது. ஊடகங்களை நல்ல விதமாகவும் கட்டுப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

மேலும் ஒரு படம் வெளியானால், அந்த படம் வெற்றிபெற்றால் அது பிறமொழிகளில் வெளியாகிறது. தென்னிந்தியாவில் இருந்து பல மொழிகள் பிறமொழிக்கு சென்றுள்ளது. அப்படித்தான், ஒரு விஷயம் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்றால் அது மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.

மிகவும்சிறியதாகவும் , நன்றாகவும் இருந்தால் மட்டுமே மக்களுக்கு பிடிக்கும். இதனால் நிறைய மாநில மொழி செய்திகளை, தகவல்கள் கொடுக்க வேண்டும் . இதற்காக இந்திய அளவில் தனியாக தளங்களை உருவாக்க வேண்டும். இதுவரை வென்ற பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதைத்தான் செய்துள்ளது, என்றுள்ளார்.

English summary
UK-India Week 2018: Umang Bedi and Vivek Oberoi on Future of creativity in India. Dailyhunt President Umang Bedi is one of the panellists. Umang Bedi says, "200 million people consume content in regional languages. The disruption in technology also gives the opportunity to create content.‘By 2020, consumers will explode in India — if you speak to them in their language, it will go to their heart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X