For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன்- இந்தியா மாநாடு: 4 வருடத்தில் பெரிய வளர்ச்சி.. நிதி ஆயோக் துணை தலைவர் பேச்சு!

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்று நிதி ஆயோக்கின் துணை தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசினார். கடந்த 4 வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் குறித்து பேசினார்.

பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி வர்த்தகம், அரசியல் மற்றும் பொது விவகாரம் தொடர்பாக இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டம் தொடங்கியது.வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டம் லண்டனில் தாஜ் பக்கிங்ஹாம் கேட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இன்று நடக்கும் நிகழ்வின் அட்டவணை வெளியாகி உள்ளது.

UK-India Week 2018: We are on the cusp of major transformation, says Rajiv Kumar

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் நிதி ஆயோக்கின் துணை தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசினார். கடந்த 4 வருட மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து பேசினார். மேலும் பொருளாதரா முன்னேற்றம் குறித்தும் பேசினார்.

அதில், இந்தியாவில் நாம் தொழிலையும், வியாபாரத்தையும் நடத்தும் விதம் முழுக்க முழுக்க மாறிவிட்டது. நம்முடைய அரசு பெரிய அளவில் மாறிவிட்டது. இங்கு வியாபாரம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, நம்முடைய குறைபாடுகளை கவனிப்பதே ஆகும். எடுத்துக்காட்டாக விவசாயத்தை கூறலாம்.

இந்தியாவின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில், நிறைய விஷயங்கள் கடந்த 4 வருடத்தில் நடந்து இருக்கிறது. நாம் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பவர்களின் கோரிக்கைகளை நான் பிரதமரிடம் எடுத்துரைப்பேன்.

உள்ளாட்சி அமைப்புகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள்தொடங்கி விட்டோம். இந்த குளிர்காலத்தில் டெல்லியில் காற்றின் தரம் சற்றே மேம்பட்டிருக்கும்.நாங்கள் முன்பு இருந்து திட்டக் கமிஷனையும், அதன் 5 ஆண்டுத்திட்டத்தையும் நீக்கி விட்டோம். நிதி ஆயோக் வெறும்யோசனைகளை மட்டும் சேகரிக்காது, இந்த யோசனைகளை செயல்படுத்தவும் பாடுபடுகிறது.

பிரதமர் மோடியின் இந்த ஆட்சியின் கீழ் நாம் மிக முக்கியமான மாற்றம் ஒன்றை காணப்போகிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய பொருளாதரம் பெரிய அளவில் மாற உள்ளது. இப்போது முதலீடு செய்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், ஆனால் அது மாறிக்கொண்டு இருக்கிறது, என்றுள்ளார்.

English summary
‘Investment is tough but times are changing’, says Dr Rajiv Kumar, vice chairman NITI Aayog in conversation with Edie Lush, Executive Editor, Hub Culture, UK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X