For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனில் யாருக்கும் பெரும்பான்மையில்லை - கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், தேர்தல் முடிவுகள் தெராசா மேவுக்கு அதிர்ச்சியளிக்கும் இருந்தது. காரணம் தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்தது.

UK polls: PM Teresa's Tory not to get majority

நேரம் செல்லச் செல்ல ஆளுங்கட்சிக்கு சாதகமான வகையில் காற்று திசை மாறியது. தற்போது வரை வெளியான முடிவுகளின்படி கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 260 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். பிரிட்டனில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எஸ்என்பி கட்சி 35 இடங்களை பிடித்துள்ளன. இதர கட்சிகள் 35 இடங்களை பிடித்துள்ளன.

2020ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் இப்போது தேர்தலை அறிவித்தது தெராசாவின் தவறான முடிவு என்றும் விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது.

English summary
In UK Parliamentary polls, PM Teresa May's Conservative party is all set to lose majority. They may emerge single largest party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X