For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தாங்க பணம்.. வட கொரியாவுக்கு சான்ஸ் கொடுங்க... ஃபிபா தலைவரை அதிர வைத்த காமெடியன்

Google Oneindia Tamil News

ஜூரிச்: சர்வதேச கால்பந்துக் கழக தலைவர் செப் பிளாட்டர் மீது போலி அமெரிக்க டாலர் பணத்தைத் தூவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் சிமோன் பிராட்கின் எனப்படும் லீ நெல்சன்.

இ்ங்கிலாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் தான் லீ நெல்சன். இவரது இயற்பெயர் சிமோன் பிராட்கின். எப்போது பார்த்தாலும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புவது இவரது உப தொழிலாகும்.

இந்த நிலையில் தற்போது புதிய பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளார் நெல்சன். அது உலகம் முழுவதும் பரபரப்பாகி விட்டது.

செப் பிளாட்டருக்கு பண அபிஷேகம்

செப் பிளாட்டருக்கு பண அபிஷேகம்

ஜூரிச்சில் உள்ள சர்வதேச கால்பந்துக் கழக தலைமையகத்திற்குச் சென்றார் நெல்சன். பின்னர் மீடியா என்ற போர்வையில், ஃபிபா தலைவர் செப் பிளாட்டரின் பிரஸ் மீட்டுக்குள் புகுந்தார்.

மிஸ்டர் பிளாட்டர் இந்தா பிடிங்க பணம்

மிஸ்டர் பிளாட்டர் இந்தா பிடிங்க பணம்

பிளாட்டர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த அவர் பிளாட்டரிடம் சென்றார். கையில் பணக்கட்டுடன் பேச ஆரம்பித்தார்.

வட கொரியாவுக்கு சான்ஸ் கொடுங்க பாஸ்

வட கொரியாவுக்கு சான்ஸ் கொடுங்க பாஸ்

மிஸ்டர் பிளாட்டர், இந்தாங்க முதல் தவணைப் பணம். இதை வைத்துக் கொண்டு வட கொரியாவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்த வாய்ப்பு கொடுங்க என்று கூறினார்.

பணத்தால் அடித்தார்

பணத்தால் அடித்தார்

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிளாட்டர், விலகிச் செல்லுங்கள் என்று நெல்சனிடம் கூறினார். ஆனால் விலகாத நெல்சன், திரும்பி தனது கையில் வைத்திருந்த பணத்தை பிளாட்டர் மீது வீசி அடித்தார். பணம் சிதறி கொட்டியது.

ராஜினாமா செய்த பிளாட்டர்

ராஜினாமா செய்த பிளாட்டர்

பெரும் ஊழல் புகார்களில் சிக்கிய பிளாட்டர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அடுத்த தேர்தல் வரை தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதற்குள் இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சு நடந்து விட்டது.

அடுத்த வருடம் தேர்தல்

அடுத்த வருடம் தேர்தல்

சர்வதேச கால்பந்து கழகத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பின்னர் பிளாட்டர் அறிவித்தார். தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கென்யே வெஸ்ட்டுக்கு டேக்கா கொடுத்தவர்

கென்யே வெஸ்ட்டுக்கு டேக்கா கொடுத்தவர்

இதற்கு முன்பு நெல்சன், கடந்த மாதம் கிம் கர்தஷியாவன் கணவர் கென்யே வெஸ்ட் நடத்திய நிகழ்ச்சி மேடையில் ஏறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தள்ளுப்பா தள்ளுப்பா

தள்ளுப்பா தள்ளுப்பா

இதேபோல கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது இங்கிலாந்து கால்பந்து அணியினர் விமானத்தில் ஏறச் சென்போது திடீரென உள்ளே புகுந்து இவரும் ஏற முயன்று டென்ஷனை ஏற்படுத்தியிருந்தார்.

இவர் எப்பவுமே இப்படித்தான் பாஸ்!

English summary
Fifa president Sepp Blatter was forced to halt a news conference when UK prankster Simon Brodkin - whose stage name is Lee Nelson - threw a pile of banknotes at him saying, "here you go, Sepp". Brodkin is known for his pranks and interrupted Kanye West's Glastonbury set last month and tried to join the England squad as they boarded the plane for the 2014 World Cup in Brazil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X