For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழக்கு உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரம்!

By Mathi
Google Oneindia Tamil News

டோன்ஸ்க்: கிழக்கு உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2013 நவம்பர் முதல் உக்ரைனில் உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதி ரஷ்யா ஆதரவு கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருதரப்பில் கடும் உள் நாட்டுப் போர் ஏற்பட்ட நிலை யில் சில மாதங்களுக்கு முன்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர்நிறுத்தம் அமலில் இருந்தது.

ஆனால் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. டோன்ஸ்க் நகர விமான நிலையம் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமான நிலையத்தை குறிவைத்து அரசு படைகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் கிளர்ச்சிப் படை நடத்திய தாக்குதலில் அரசு தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப் படவில்லை.

இருதரப்பிலும் அண்மையில் மட்டும் நூற்றுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித் துள்ளன.

English summary
Ukraine-Rebel leaders in eastern Ukraine vowed Friday to extend their advances against government troops and boycott further peace talks despite a diplomatic push to implement a long-ignored cease-fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X