For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் பெற்றது- கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டோனட்ஸ்க் : உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனின் கிரிமியா தன்னாட்சி பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்தது.

இதேபோன்று உக்ரைனின் கிழக்குப்பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை தொடங்கினர்.

பொதுவாக்கெடுப்பு:

பொதுவாக்கெடுப்பு:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் கிழக்குப்பகுதியில் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இன்று சுதந்திரம்:

இன்று சுதந்திரம்:

பின்னர் இந்த பிராந்தியங்கள் சுதந்திரம் பெற்றதாக இன்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்த வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று உக்ரைன் அரசும் மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

ரஷ்ய இணைப்பு:

ரஷ்ய இணைப்பு:

இதுதொடர்பாக பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உக்ரைன் நாட்டின் இடைக்கால அரசிடம் ரஷ்யா ஏற்கனவே கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த இணைப்பு கோரிக்கை தொடர்பாக உடனடி பதில் எதுவும் வரவில்லை. பொதுவாக்கெடுப்பு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த வேண்டுகோளையும் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

மக்களின் முடிவு:

மக்களின் முடிவு:

மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மீது அவர்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்தியிருப்பதையே இந்த வாக்கெடுப்பு காட்டுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தல்:

அதிபர் தேர்தல்:

இதற்கிடையே உக்ரைனில் வருகிற 25 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான வாக்கு சாவடிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்கா எச்சரிக்கை:

உக்ரைன் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டால் அந்த நாட்டு பொருளாதாரத்தின் மொத்த துறைகளையும் குறிவைத்து நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A separatist leader declared Monday that eastern Ukraine's Donetsk region was not only independent, but also would ask to join Russia -- a day after referendum organizers claim voters in the region chose to break away from Kiev.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X