For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைன் நாட்டின் புதிய அதிபராகிறார் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி.. மே மாதம் பதவியேற்பு

Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்யாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஆனால் முன்னதாக அந்நாட்டில் நடைபெற்ற முதல் சுற்று தேர்தலின் போது எந்த வேட்பாளரும், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

Ukraines new president becomes comedian actor Zelensky sworn in May

இதனையடுத்து முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் இடையே, 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி உக்ரைனில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்றில் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டதில், தொடக்கம் முதலே நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 73 சதவீத வாக்குகள் பெற்று ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபராக அபார வெற்றி பெற்றார். தற்போது அதிபராக உள்ள பெட்ரோ போரோஷெங்கோவுக்கு 27 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதனையடுத்து தமது வெற்றியை ஜெலன்ஸ்கி ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாக கூறினார் எனக்கு எப்போதுமே ஆதரவாக இருந்து வரும் எனது குழுவினருக்கும் நன்றி. தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னை பற்றி செய்யப்பட்ட விமர்சனங்களை, என் மனைவி திருமணத்திற்கு முன்பே கேட்டிருந்தால், என்னை அவர் நிச்சயம் மணம்புரிந்திருக்க மாட்டார் என்று நகைச்சுவையாக கூறினார்.

இலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி இலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி

மேலும் தனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என்றார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை போரோஷெங்கோ ஏற்று கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெலன்ஸ்கி உக்ரைனின் புதிய அதிபராக வரும் மே மாத துவக்கத்தில் பதவி ஏற்க உள்ளார்.

உக்ரைன் பிரதமராக வோலோடிமைர் க்ரோஷ்மேன் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் இஸ்ரேலுக்கு பிறகு, உக்ரைனில் தான் அதிபராகவும் பிரதமராகவும் யூதர்கள் ஒரே நேரத்தில் பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Comedy actor Volodymyr Zelensky has been elected as Ukraine's new president
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X