For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நம்பர் 26"- மலேசிய விமான பயணியின் அடையாளம் அறிய சோகத்துடன் ஆர்வம் காட்டும் உக்ரைன் மூதாட்டி

Google Oneindia Tamil News

டோனட்ஸ்க், கிழக்கு உக்ரைன்: கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் நகரில் வசித்து வரும் 60 வயதான இன்னா திப்புனோவா பெரும் சோகத்துடன் இருக்கிறார்.

அவரது மனதை ஒரு விஷயம் சோகத்துடன் போட்டு அரித்துக் கொண்டிருக்கிறது.

விடை காண முடியாத விரக்தியில் அந்த மூதாட்டி சோகத்துடன் காணப்படுகிறார்.

கூரையைப் பிய்த்து விழுந்த உடல்:

கூரையைப் பிய்த்து விழுந்த உடல்:

மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி கீழே விழுந்து சிதறியபோது, திப்புனோவாவின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஒரு பெண்ணின் உடல் வந்து விழுந்துள்ளது. இதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து போனார்.

கண்ணீர் விட்ட மூதாட்டி:

கண்ணீர் விட்ட மூதாட்டி:

உயிரிழந்து விழுந்த அந்தப் பெண்ணுக்காக கண்ணீர் வீட்டார். அவர் யார் என்று தெரியாமல் சோகமானார். நடந்ததை நினைத்து வருத்தப்பட்டார்.

உடலின் பெயர் நம்பர் 26:

உடலின் பெயர் நம்பர் 26:

அந்தப் பெண்ணின் உடலை மீட்ட புரட்சிப் படையி்ன் மீட்புக் குழுவினர் அந்த உடலுக்கு நம்பர் 26 என்று பெயரிட்டனர். அதாவது 26 ஆவது உடல் என்று அர்த்தம்.

பெயர் அறிய விருப்பம்:

பெயர் அறிய விருப்பம்:

இதுகுறித்து திப்புனோவா கூறும்போது, " அந்தப் பெண் யார், எந்த நாட்டவர், அவருடய பெயர் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். ஆனால் மீட்புப் படையினர் 26 ஆவது உடல் என்றுதான் அவரை அழைக்கிறார்கள். இது வருத்தம் தருகிறது" என்றார்.

மனதைக் கிழிக்கும் வருத்தம்:

மனதைக் கிழிக்கும் வருத்தம்:

மேலும் அவர் கூறுகையில், "இந்த உடலை மீட்டவர்கள் ஒரு கருப்புப் பையில் உடலை திணித்தனர். பின்னர் தூக்கிச் சென்று விட்டனர். அவரை அடையாளம் காண முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது" என்றார்.

திப்புனோவாவின் வீடு:

திப்புனோவாவின் வீடு:

கிழக்கு உக்ரைனில் புரட்சிப் படையினர் வசம் இருக்கும் டோனட்ஸ்க் நகரில்தான் திப்புனோவாவின் வீடு உள்ளது.

தோழி வீட்டுக்கு சென்றவர்:

தோழி வீட்டுக்கு சென்றவர்:

சம்பவத்தன்று திப்புனோவா தனது தோழியைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போயிருந்தார். அப்போது அவரது 27 வயது மகன் அலெக்சாண்டர் போன் செய்து, நமது வீட்டில் குண்டு விழுந்து விட்டது என்று கூறியுள்ளார். உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார் திப்புனோவா.

குண்டல்ல பயணியின் உடல்:

குண்டல்ல பயணியின் உடல்:

வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து விழுந்தது குண்டு அல்ல மாறாக, மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த பயணியின் உடல் என்று தெரிந்தது.

சுவரெல்லாம் ரத்தம்:

சுவரெல்லாம் ரத்தம்:

வீட்டின் கூரையில் விழுந்து வீட்டுக்குள் அந்த உடல் விழுந்துள்ளது. இதில் சுவரெல்லம் ரத்தம் சிதறிக் கிடந்தது. அப்பெண்ணின் உடல் பாகங்கள் சுவரில் பட்டுச் சிதறி விழுந்துள்ளன.

50 வயது பெண்:

50 வயது பெண்:

இதுகுறித்து திப்புனோவா மேலும் கூறுகையில், " பாதி உடல்தான் வந்து விழுந்தது. அது ஒரு பெண். அவருக்கு 50 வயது இருக்கும். போர் நடப்பது குறித்து எங்களுக்குத் தெரியும். எனவே குண்டுகள் வந்து விழலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் எப்போதும் இருக்கிறோம். ஆனால் அதை விட மாோசமாக ஒரு பெண்ணின் உடல் வந்து விழுந்தது கவலையைத் தருகிறது" என்றார் அவர்.

அக்காவின் வீட்டிலும் ஒன்று:

அக்காவின் வீட்டிலும் ஒன்று:

இதேபோல திப்புனோவாவின் மூத்த சகோதரியான தாத்தியானா சாச்சாவின் வீட்டுக் கூரையிலும் ஒரு உடல் வந்து விழுந்ததாம்.

கொடுமையான சம்பவம்:

கொடுமையான சம்பவம்:

தாத்தியானா இதுகுறித்துக் கூறுகையில், " வானிலிருந்து மனித உடல்களாக வந்து விழுந்தன. வயல்கள், வீடுகளில் விழுந்தன. இதை மறக்க முடியாது. கொடுமையானது " என்றார்.

திருந்துங்கள் பிளீஸ்:

திருந்துங்கள் பிளீஸ்:

போர் நிச்சயம் அழகானது அல்ல.. அவலமான, கொடுமையான, கொடூரமானது.. மனிதத்தன்மையற்றது! இவ்வளவு பேரை கொன்று குவித்து வெற்றிபெற்று என்ன சுகம் உங்களுக்கு கிடைக்கும்?...திருந்துங்கள் தயவுசெய்து!

English summary
“I want to know about her, who she was, her name, these things, but they just call her ‘Number 26’,” the 60-year-old said as she stood inside her son’s granny flat at the side of her home, looking up to the roof and into the deep blue summer sky above.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X