For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. பலாத்கார சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெனீவா: உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழிவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

UN chief Ban Ki-moon appalled by Badaun gang-rape case, demands action

இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கழிவறை இல்லாத காரணத்தினால் வெளியே சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்குரிய பிரச்சினை. பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இருந்தாலும் துரதிருஷ்டமாக உலகம் முழுவதும் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.

ஏற்றுக்கொள்ள முடியாத, சகதித்துக்கொள்ள முடியாத இந்த சம்பவங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

English summary
Appalled by the brutal rape and murder of two teenaged girls in India, UN secretary general Ban Ki-moon has demanded action against sexual violence and appealed to the society to reject the destructive attitude of "boys will be boys".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X