For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன் சீட்டில் டிரைவர்.. பின் சீட்டில் அதிகாரி மடியில்.. ஓடும் காரில் "கசமுசா".. தீவிரமாகும் விசாரணை

ஓடும் காரில் உடலுறவு கொண்ட அதிகாரி மீது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

ஜெருசலம்: முன்சீட்டில் டிரைவர்.. பின் சீட்டில் அதிகாரியின் மடியில் உட்கார்ந்துள்ளார் அந்த பெண்.. திடீரென ஓடும் காரிலேயே 2 பேரும் செக்ஸ் வைத்து கொண்டுள்ளனர்.. இது சம்பந்தமான வீடியோ ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை தந்த நிலையில், விசாரணை தற்போது துரிதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஐநா சபைக்கு அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு ஆபீஸ் சம்பந்தமாக ஒரு காரும் தரப்பட்டிருந்தது.. அது வெள்ளை நிற கார்... சில தினங்களுக்கு முன்பு, டெல் அவிவில் அந்த கார் சென்று கொண்டிருந்தது.. அப்போது ரெட் கலர் டிரஸ் அணிந்த பெண் ஒருவர் ஏறுகிறார்.

UN chiefs un official car sex video issue

முன் சீட்டில் டிரைவர் இருக்கிறார்.. பின் சீட்டில் அதிகாரியின் மடியில் வந்து உட்காருகிறார் இந்த பெண்.. பிறகு திடீரென 2 பேரும் உடலுறவில் ஈடுபட்டு விட்டனர். இதை காரின் பக்கத்தில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார்... சில நாட்கள் கழித்தே இந்த வீடியோ வெளியிட்டிருக்கிறார்.. கிட்டத்தட்ட18 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.. அந்த அதிகாரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், ஐசா சபை இது சம்பந்தமான விசாரணையை தொடங்கி உள்ளது... ஐநா-வால் இந்த கொடுமையை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை.. பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐநா தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்படி ஒரு வீடியோவை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

"எதுக்காக நாம வேலை பார்க்கிறோமோ? எதுக்காக நாம பேசுகிறோமோ அது எல்லாத்துக்குமே எதிரானதுதான் இப்படிப்பட்ட செயல். இதையெல்லாம் அவங்க வீட்டுல இல்லையென்றால், அவங்களுடைய ரூமில் வைத்து கொள்ளவேண்டும்.. ஆபீஸ் வேலைக்காக தந்த காரை இப்படி பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்" என்று ஐநா செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது, "கடந்த வருடம் மட்டும், ஐநா ஊழியர்கள் மீது பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம் தொடர்பாக 175 குற்றச்சாட்டுகள் இருந்தன.. அந்த குற்றச்சாட்டுகளில், 16 ஆதாரங்கள், 15 ஆதாரமற்றவை, மற்ற அனைத்தும் இன்னும் விசாரணையில் உள்ளன" என்று அத்தகவல்கள் சொல்கின்றன.. கடந்த வருட வழக்குகளே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளது பெருத்த தலைவலியாக உருவெடுத்துள்ளது.

ஷாக் வீடியோ.. ஷாக் வீடியோ.. "மாஸ்க் எங்கே" என கேட்ட மாற்று திறனாளி பெண்.. தலைமுடியை பிடித்து உதைத்த திமிர் அதிகாரி

இப்போது, இந்த வீடியோ பல சந்தேகங்களை சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது..அந்த காரில் இருப்பவர்கள் ஒருமித்த உறவில் இருந்தார்களா? அல்லது சம்பந்தப்பட்ட அந்த பெண் பாலியல் தொழிலாளியா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவராமலேயே உள்ளது.. அதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

English summary
UN chiefs un official car sex video issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X