For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படையினரை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜெனிவா: இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியா விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு மீனவர்களை கொச்சி கடல் பகுதியில் என்ட்ரிகா லெக்ஸி கப்பலில் வந்த இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் இத்தாலி மாலுமிகள் மிஸிமிலினோ ரதோர், சல்வதார் ஜிரோம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை கைவிடுமாறு இத்தாலி அரசு தொடர்ந்து விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

UN court orders return of murder-accused marine from India

இத்தாலிய கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக்கோளாறு காரணமாக ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனி என்பவரை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே, இத்தாலி இந்த விவகாரத்தை ஐநா நிரந்தர சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்திடம் எடுத்துச்சென்றது.

இந்த விவகாரத்தில், இந்தியா, இத்தாலி மீனவர்களை விடுவிக்க வேண்டும் ஐநா நடுவர் மன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார். இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று இத்தாலி அமைச்சர் தெரிவித்த நிலையில், இந்தியா இந்த கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், இத்தாலி உண்மையை தவறாக சித்தரிப்பதாகவும், கடற்படை வீரருக்கு ஜாமீன் கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தை இத்தாலி அணுக வேண்டும் என்று ஐநா நடுவர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதை, கிரோனியை விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளதாக இத்தாலி தவறாக சித்தரித்துள்ளதாக தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
UN court orders return of murder-accused marine from India, announces Italy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X