For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனை

Google Oneindia Tamil News

ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது. அது போல் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4.80 லட்சமானது. இதுவரை 50 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

58,013 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 2ஆம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் என குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம் கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

கொரோனா

கொரோனா

சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அனைத்து நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளை விட்டுவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வாருங்கள் என அழைப்பு விடுத்தார். சமூக விலகல், மாஸ்க் அணிதல், கைககளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஐநா சபை வலியுறுத்தி வருகிறது.

உலக ஒருங்கிணைப்பு

உலக ஒருங்கிணைப்பு

இந்த நிலையில் ஐநா சபையின் பொதுச் செயலாளர் குட்டரெஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் உலக நாடுகள் அனைவரும் தனித்து செல்வதன் மூலம் நிலைமை கையை மீறி செல்லும் நிலைக்கு சூழலை கொண்டு செல்கிறார்கள. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி உலக ஒருங்கிணைப்பு முக்கியமானது.

கொரோனா

கொரோனா

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த கொரோனா ஐரோப்பியா நாடுகளுக்கும் வடஅமெரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா என பெரும்பாலான நாடுகளில் பரவியது. ஒன்றிணைந்து செயல்படுவது என்ற புரிதலை நாடுகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பரிசோதனை

பரிசோதனை

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி நோய்க்கான சிகிச்சை, பரிசோதனை முறைகள், தடுப்பூசி உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வீழ்த்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள், வன்முறை அதிகரித்தல், மனித உரிமைகள் மீறப்படுவது உள்ளிட்டவைகளுக்கு அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் ஒருங்கிணைப்பது நோயின் தாக்கத்தை குறைக்கும்.

விரக்தி

விரக்தி

அது போல் சர்வதேச அளவில் ஒற்றுமை இல்லாததால் நான் வேதனையும் விரக்தியும் அடைகிறேன். தடுப்பூசி என கண்டுபிடித்தால் அது மக்களுக்கான தடுப்பூசியாக இருக்க வேண்டும். வணிக ரீதியில் பணக்காரர்களை உருவாக்குவது போன்று இருக்கக் கூடாது என குட்டரேஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    India China Border பிரச்சினை இருந்தா இருக்கட்டும்...Russia அதிபர் Putin-ன் அதிரடி Plan

    English summary
    United Nations General Secretary Antonio Guterres says there is no cooperation between world countries s they are going in an independent way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X