For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட உரிமை இருக்கு... விவசாயிகளுக்கு ஐநா சப்போர்ட்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது எனவும் அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா கருத்து தெரிவித்து உள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச கவனத்தையும் ஈர்க்க தொடங்கி உள்ளது. அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

UN has said that farmers have the right to protest

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்கு பல்வேறு தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வரிசையில் கனடாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!

இந்த நிலையில் ஐநா அமைப்பு விவசாயிகள் போராட்டம் குறித்து முதன் முதலாக கருத்து கூறி உள்ளது. இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என? செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன்ஸ்டீபன் கூறியதாவது:- உலக மக்கள் யாவருக்கும் அமைதியாக போராட்டம் நடத்த உரிமை உள்ளது. எனவே அரசுகள், அதிகாரிகள் மக்களை அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

UN has said that farmers have the right to protest

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் எனவும் இது தேவையற்றது எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ள நிலையில் கனடா அதிபர், ஐநா அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The UN has commented that the people have the right to protest peacefully
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X