For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐநாவில் இந்தியா வைத்த அதிரடி வாதம்.. காஷ்மீர் விவகாரத்தில் பாக்.கிற்கு நெத்தியடி.. மாஸ் பேச்சு!

தீவிரவாதத்தை ஆதரிக்கும் சில நாடுகளால்தான் இந்தியாவில் மோசமான தாக்குதல்கள் நடந்து வருகிறது என்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஐநாவில் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஜெனீவா: தீவிரவாதத்தை ஆதரிக்கும் சில நாடுகளால்தான் இந்தியாவில் மோசமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது என்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஐநாவில் பேசியுள்ளார்.

ஐநா மனித உரிமை மாநாடு தற்போது ஜெனிவாவில் இருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சலில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 47 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.இன்று நடக்கும் இந்த கூட்டத்தில் பாகிஸ்தான், சீனா இரண்டு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவில் எழுப்பியது.

எப்படி

எப்படி

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தனது பேச்சில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது. அங்கு இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அங்கு மக்களின் அடிப்படை உரிமைகள் தடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரானது ருவாண்டாவைப் போல நடத்தப்படுகிறது. ஐநா உடனடியாக காஷ்மீர் விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கூறினார்.

என்ன பதில்

என்ன பதில்

இந்த நிலையில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் தக்கூர் சிங் இதற்கு பதில் அளித்தார். காஷ்மீர் விவகாரம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். ஜம்மு காஷ்மீர் சரியான திசையில் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

எப்படி நடவடிக்கை

எப்படி நடவடிக்கை

அங்கு முற்போக்கான நடைமுறைகள் பின்பற்றப்படும் . கல்வி, பெண் விடுதலை அங்கு கொண்டு வரப்படும். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் ராணுவ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் குறைந்த பிறகு விரைவில் அங்கு ராணுவ கட்டுப்பாட்டை தளர்த்துவோம். காஷ்மீரில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்றம் கவனித்து வருகிறது.

எங்களை கவனம்

எங்களை கவனம்

உச்ச நீதிமன்றம் எங்களை கவனிக்கிறது. அதனால் நாங்கள் அங்கு நீதிக்கு புறம்பான விஷயங்களை எப்போதும் செய்ய முடியாது. தீவிரவாதத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு அளிக்கும் சில நாடுகள் இருக்கிறது. அந்த நாடுகள்தான் மனித உரிமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

நாடுகள்

நாடுகள்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் சில நாடுகளால்தான் இந்தியா கூட மோசமான பாதிப்பை, தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இது போன்ற அமைப்புகள். நாடுகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மனித உரிமைக்கு எதிராக செயல்படுகிறார்கள்,

முக்கியம் ஏன்

முக்கியம் ஏன்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, இட்டுக்கட்டி கூறப்பட்டவை. தனக்கு தோன்றியதை எல்லாம் பாகிஸ்தான் ஐநாவில் பேசி வருகிறது. தன்னுடைய சுயநலத்திற்காக ஐநா போன்ற உலக மேடையை பாகிஸ்தான் பயன்படுத்துவது தவறு, என்று பேசி வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் தக்கூர் சிங் கூறி உள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஐநாவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
UN Human Rights Council Meet: India gave it back on the face of Pakistan on Kashmir Issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X