For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

திஹேக்: ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.,

மியான்மரில் 2017-ல் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு இடம்பெயர்ந்தனர்.

UN Rights expert welcomes ICJ verdict on Myanmar to Protect Rohingyas

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நீதி கோரி ஆப்பிரிக்க நாடான காம்பியா, திஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் மியான்மர் அரசின் செயல் தலைவர் ஆங் சாங் சூகி நேரில் ஆஜராகி இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்தும் இருந்தார்.

சி.ஏ.ஏ.வை ஆதரிப்பதா? தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்சி.ஏ.ஏ.வை ஆதரிப்பதா? தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்

மேலும் தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க ரோஹிங்கியாக்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மியான்மரின் வாதம். இவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ள சர்வதேச நீதிமன்றம், ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஆங் சாங் சூகிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அத்துடன் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
UN Rights expert welcomes the ICJ verdict on Myamar to Protect Rohingyas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X