For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலுக்கடியில் ஒரு உல்லாச உலகம் – பிஜி கடலடி ஹோட்டலுக்கு 13 வருடமாக காத்திருக்கும் 1,50,000 பேர்!

Google Oneindia Tamil News

ஷார்ஜா: துபாயின் பிஜி நாட்டில் அமைந்துள்ள தீவு ஒன்றில் கடலுக்கடியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக 13 வருடங்களாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

பிஜி நாட்டில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கடலுக்கு அடியில் ஹோட்டல் கட்டுவதற்கான பணி 2001ல் தொடங்கப்பட்டது.

25அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் சிறப்பு கண்ணாடி கூண்டுகளை கொண்டு அமைக்கப்பட இருக்கிறது.

ஒரு வாராத்திற்கு 7 லட்சம் ரூபாய்:

சிற்றுண்டி விடுதி, உடற்பயிற்சி கூடம், திருமணம் நடத்தும் சிறிய ஆலயம் உள்ளிட்ட வசதிகளோடு அமைய உள்ள‌ இருக்கும் இந்த ஹோட்டலில் ஒரு வாரம் தங்குவதற்கு ரூபாய் 7 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது

13 ஆண்டுகளாக காத்திருப்பு:

ஆனால் இது வரை பணிகள் நிறைவடையவில்லை. ஹோட்டல் ப‌ணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு முன் பதிவு செய்த 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 13 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

முழுப்பாதுகாப்புடன் ஹோட்டல்:

இந்த கடல் ஹோட்டலைப் பற்றி கூறும் நிர்வாகிகள், "அனைத்துவிதமான பாதுகாப்புகளுடன் உருவாகிக் கொண்டிருக்கின்றது இந்த ஹோட்டல்.

கடலுக்கு அடியில் வருவதற்கு லிப்ட்:

கடலுக்கு அடியில் மட்டும் இன்றி, கடலுக்கு மேலும் 51 அறைகள் கொண்டதாக இருக்கும். கடலுக்கு அடியில் வரவேண்டும் என்றால், மேலே உள்ள லிப்டை பயன்படுத்த‌ வேண்டும்" என்று தெரிவித்தார்.

English summary
Construction on the resort, located 40ft under water, began in 2001 An underwater resort, located 40feet under the sea by a lagoon off Fiji, which is yet to be completed reportedly has a guest-list of 150,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X