For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cellphone Service restored in 5 districts in Jammu Kashmir

    சுவிஸ்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தி மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பாச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

    UNHR urges India to ease restrictions in JK

    அம்மாநிலத்தில் அசாதாரண நிலையை தவிர்க்க இணையம், தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வெளி உலகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் அதன் தலைவர் மிச்சல் பாச்லெட் குறிப்பிட்டுப் பேசினார்.

    சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடிசென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி

    இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்திய நிர்வாக காஷ்மீரில் மக்களின் இயல்புவாழ்க்கை தொடங்கப்பட வேண்டும் என்றும் மிச்சல் பாச்லெட் கேட்டுக் கொண்டார்.

    English summary
    UN High Commissioner for Human Rights has urged that she is deeply concerned about the India's recent actions in Jammu Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X