For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் செயல்படும் யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறால் விமான டிக்கெட்டுகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. இதனால் கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தாங்க முடியவில்லை.

கம்ப்யூட்டர் கோளாறால் விமான டிக்கெட்டுகள் கட்டணமில்லாமலும், மிகக் குறைந்த கட்டணத்திற்கும் ஆன்லைனில் கிடைத்தன. பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டும் கட்ட வேண்டி இருந்தது. இந்த கோளாறு குறித்து அறிந்த விமான நிறுவனம் தனது இணையதளத்தை நேற்று மூடியது.

United Airlines to honour tickets issued for $0 in glitch

மேலும் கட்டணமில்லாமல் மற்றும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைவரும் அந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹவாய் மற்றும் லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பிரபல இடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Passengers book tickets for free in the United Airlines website on thursday because of a computer error.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X