For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துரோகம்.. எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்!

இஸ்ரேல் உடன் அமீரகம் ஒப்பந்தம் செய்ததற்கு பாலஸ்தீன மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேல் உடன் அமீரகம் ஒப்பந்தம் செய்ததற்கு பாலஸ்தீன மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் உடன் மூன்று நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் கூட்டாக இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது.

பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த போவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு கைமாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும்.

இஸ்ரேல் - அமீரகம் டீலிங்.. இந்தியாவிற்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமையாது.. இனி புகுந்து விளையாடலாம்இஸ்ரேல் - அமீரகம் டீலிங்.. இந்தியாவிற்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமையாது.. இனி புகுந்து விளையாடலாம்

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதை பாலஸ்தீனம் கடுமையாக எதிர்த்து இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று பாலஸ்தீனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்தின்படி, நாங்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்கிறோம். எங்களுக்கு என்று யாருமே இல்லை. பாலஸ்தீனத்தை இஸ்லாமிய நாடுகள் கைவிட்டுவிட்டது.

குத்திவிட்டனர்

குத்திவிட்டனர்

எங்கள் முதுகில் ஐக்கிய அரபு அமீரகம் குத்தி விட்டது. மிக சக்தி வாய்ந்த அமீரகம் எங்களுக்கு உதவாமல், இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களின் பங்களிப்பு இன்றி யாருடைய உறவை இவர்கள் சரி செய்ய நினைக்கிறார்கள். இஸ்ரேல் இப்போது எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துதான் இருக்கிறது.

 வெளியேற்றி உள்ளனர்

வெளியேற்றி உள்ளனர்

அவர்களை வெளியேற்றவில்லை. எங்கள் நிலத்தில் கட்டிடங்களை இடிக்கிறது. குழந்தைகளை கொல்கிறது. அதை அமீரகம் எதிர்த்து கேட்கவில்லை. பதிலாக அவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எங்களை அமீரகம் துரும்பாக கூட மதிக்கவில்லை. ஒரு சகோதரனுக்கு இப்படி செய்ய கூடாது. அவர்கள் இஸ்ரேலுடன் கைகோர்த்துவிட்டனர்.

துரோகி

துரோகி

நாங்கள் அமீரகத்தை துரோகி என்றுதான் கூறுவோம். இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். அமீரகத்தை பிற நாடுகளும் பின்பற்றும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஏமாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல், அமைதி என்பது சாத்தியம் இல்லை. இந்த ஒப்பந்தம் முடிவிற்கான தொடக்கம், என்று பாலஸ்தீன மூத்த அரசியல் தலைவர்கள், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

ஈரான்

ஈரான்

இதற்கு இன்னொரு பக்கம் துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க தவறானது. பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், இஸ்லாமிய மக்களை ஏமாற்றிவிட்டது. இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து மிக தவறான வழிகாட்டுதலை உலகிற்கு அமீரகம் வழங்கிவிட்டது, என்று கூறியுள்ளார்.

English summary
United Arab Emirates stabbed on our back by dealing with Israel says Palestine people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X