For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை.. துருக்கி நிலநடுக்கம்.. ஷாக் புகைப்படங்கள்

பனி படர்ந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்க சேதங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Google Oneindia Tamil News

அன்காரா: துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை துருக்கியில் இன்று காலை 7.9 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை துருக்கியில் 100 பேர் வரை பலியாகி உள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம் என்று அமெரிக்கா புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று என்று அமெரிக்கா குறிப்பிட்டு உள்ளது.

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்.. இன்னொரு பக்கம் இத்தாலியிலும் அதிர்வு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்.. இன்னொரு பக்கம் இத்தாலியிலும் அதிர்வு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

சிரியா

சிரியா

சிரியா எல்லையில் காசியாண்டெப் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 17 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. எல்லையோர நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு உள்ள வீடுகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சிரியாவில் மட்டும் 42 பேர் இந்த நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. சில மணி நேரங்களில் பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கட்டிடங்கள் உடைந்தன

கட்டிடங்கள் உடைந்தன

சிரியா எல்லையோர நகரங்கள், துருக்கியில் 10க்கும் மேற்பட்ட நகரங்கள் மொத்தமாக இந்த நிலநடுக்கத்தால் முடங்கி போய் உள்ளது. இங்கே கடுமையான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. துருக்கி மாலடையா என்ற பகுதியில் மட்டும் அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

புகைப்படங்கள் - வீடியோக்கள்

புகைப்படங்கள் - வீடியோக்கள்

துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பனி படர்ந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்க சேதங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வீடுகள் சிதைந்து மக்கள் சாலையில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அங்கு தற்போது கடும் பனிக்காலம் என்பதால் மக்கள் குளிரில் சாலையில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கொடுமை

கொடுமை

45 நொடிகள் முதல் ஒன்றரை நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. முதல் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட உடனே கடைசியாக 7.9 ரிக்டரில் அடுத்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. முதல் இரண்டு நிலநடுக்கங்கள் 7 ரிக்டருக்கு குறைவாக பதிவாகி உள்ளது. துருக்கியில் பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். இங்கே 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
United States Geological Survey estimates Turkey earthquake could end up resulting in thousands of deaths
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X