For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம்.. அமெரிக்காவில் பெரும் நோய் பேரழிவு! மறு பக்கம் என்ன நடக்கிறது பாருங்க

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல், நாட்டின் அனைத்து 50 மாகாணங்களும் லாக்டவுனை தளர்த்தியுள்ளன.

Recommended Video

    கொரோனா உயிரிழப்பு... அமெரிக்காவில் 1 லட்சத்தை தாண்டியது

    தடுப்பூசி தயாரிக்கப்படாவிட்டால் நாட்டில் 50 முதல் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அந்த நிலை ஏற்பட்டால், அமெரிக்காவில், இறப்புகளின் எண்ணிக்கை 2024 க்குள் 14 லட்சத்தை எட்டும்.

    அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி நியூயார்க். அங்கு நாட்டின் மொத்த கேஸ்களில் 22 சதவீதம் பதிவாகியுள்ளன. சுமார் 30,000 பேர் இறந்துள்ளனர்.

    நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!

    நியூயார்க்

    நியூயார்க்

    நியூயார்க்கில்தான், ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்சி, கலிபோர்னியா, மற்றும் இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் ஆகிய ஐந்து மாகாணங்களில், கொரோனாவல் 55,000 பேர் பலியாகியுள்ளனர்.

    முந்தைய பேரழிவுகள்

    முந்தைய பேரழிவுகள்

    இரண்டு மாத கடுமையான லாக்டவுன் இருந்தபோதிலும், அமெரிக்காவில் இறப்புகள் 100,000த்தை எட்டியுள்ளன. முன்னதாக 1957இல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் ஃப்ளூ காய்ச்சலால் கொல்லப்பட்டனர், 1968 இல் இதேபோன்ற காய்ச்சலால், அமெரிக்காவில், ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை விரைவில் அங்கு தாண்டப்படும் போல தெரிகிறது.

    முதலாம் உலகப்போர்

    முதலாம் உலகப்போர்

    முதலாம் உலகப் போரின்போது, ​​காய்ச்சலால் 6 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிர் இழந்தனர். அதுதான் அந்த நாடு கண்ட பெரும் நோய் பரவல் பாதிப்பு. இப்போது, கொரோனா அந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

    மறுபக்கம் ஜாலி

    மறுபக்கம் ஜாலி

    அதே நேரத்தில், இறப்பு மற்றும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கர்கள் கடற்கரைகளில் சூரிய குளியலில் ஈடுபடுவதையும், படகுகளில் மீன்பிடித்தல் மற்றும் நீச்சல் அடிப்பதையும் காண முடிகிறது. புளோரிடா, நியூயார்க் மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

    நீச்சல் குளம்

    நீச்சல் குளம்

    மக்கள் குளங்கள் மற்றும் கிளப்புகளில் விருந்து நடத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. அமெரிக்க போரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவேந்தலை நினைவுகூரும் வகையிலான நினைவு நாளிலும் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

    உலக நிலவரம்

    உலக நிலவரம்

    அதேநேரம், உலகம் முழுக்க கொரோனாவுக்கு 5,588,020 பேர் பாதிப்படைந்துள்ளனர். உலகம் முழுக்க கொரோனா பலி எண்ணிக்கை 347,872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 2,365,703 பேர் மீண்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805 என்ற அளவில் உள்ளது.

    English summary
    In the United States, the death toll from coronavirus has reached nearly one lakh. However, regardless of this, all 50 provinces of the country have eased Lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X