For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்...!

Google Oneindia Tamil News

சிட்னி: நமது பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதாக கூறியுள்ளனர் ஆஸ்திரேலய ஆய்வாளர்கள்.

இன்னும் 100 பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் முற்றிலும் அழிந்து போய் விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிட்னியில் உள்ள சர்வதேச ரேடியோ அஸ்ட்ரானமி ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் குழுதான் இப்படித் தெரிவித்துள்ளது.

எனர்ஜி குறைகிறது

எனர்ஜி குறைகிறது

இந்தக் குழுவின் தலைவரான சிமோன் டிரைவர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 2 லட்சம் கேலக்ஸிகளிலிருந்து வெளியாகும் எனர்ஜியானது குறைந்து கொண்டே வருகிறது.

2 பில்லின் வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட

2 பில்லின் வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட

தற்போது வெளியாகும் எனர்ஜியை அளவிட்டால் அது 2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு வெளியானதை விட பாதியளவாக குறைந்துள்ளது. தொடர்ந்து எனர்ஜி குறைந்து வருகிறது.

மெல்லச் சாகும் பிரபஞ்சம்

மெல்லச் சாகும் பிரபஞ்சம்

நமது பிரபஞ்சம் செத்து வருகிறது. ஆனால் அது நிதானமாக, மெதுவாகத்தான் இருக்கிறது. முழுமையான செயலிழப்புக்கு குறைந்தது 100 பில்லியன் வருடங்கள் பிடிக்கும் என கணக்கிடப்படுகிறது' என்றார் அவர்.

90களில் முதல் முறையாக

90களில் முதல் முறையாக

1990களில்தான் முதல் முறையாக நமது பிரபஞ்சம் செயலிழந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நடந்துள்ள ஆய்வானது அதை உறுதிப்படுத்தியுள்ளது.

பிறப்பு என்று இருந்தால் இறப்பும் இயற்கைதானே

பிறப்பு என்று இருந்தால் இறப்பும் இயற்கைதானே

எப்படி பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு உறுதியோ, அதேபோலத்தான் நமது பிரபஞ்சமும் ஒரு நாள் மரணிக்கும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

English summary
Researchers from the International Center for Radio Astronomy Research (ICRAR) in Australia have measured the energy generated across 200,000 galaxies more precisely than ever before, discovering it is only half of what it was 2 billion years ago and is continually fading, reports Xinhua.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X