For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்தில் குடிபோதையில் கலாட்டா செய்த பயணி… இறக்கிவிட்ட பயணிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பிலடெல்பியா: விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் செய்த கலாட்டவை தாங்காமல் அவரை இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்துள்ளனர் பிற பயணிகள்.

அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் 40 வயதான ராபர்ட் கொபக் என்பவரும் ஒருவர்.

Unruly passenger charged after plane forced to return to Philadelphia

போதையில் சேட்டை

சரியான போதையில் இருந்த கொபக் தனது சேட்டையை தொடங்கியுள்ளார். விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண் பயணிகள் குடிபோதையில் இருந்த கொபக்கின் நடவடிக்கை குறித்து விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

கடைசிக்கு போப்பா

இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து எழுப்பிய ஊழியர்கள் விமானத்தின் பின்பகுதியில் இருந்த இருக்கை ஒன்றில் அவரை அமர வைத்தனர்.

பணிப்பெண் மீது சாய்ந்தார்

அங்கேயும் எழுந்து நடந்தபோது தடுமாறிய கொபக் அங்கிருந்த ஒய்வு பெற்ற பணிப்பெண் ஒருவர் மீது சாய்ந்துள்ளார்.

திரும்பிய விமானம்

இதனைத் தொடர்ந்து ஊழியருக்கு அச்சமேற்படுத்தியதாகக் கூறி விமான அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைப்பதற்காக புறப்பட்ட இடத்திற்கே விமானம் மீண்டும் திரும்பியது.

கைவிட்ட உறவினர்கள்

அவரால் கொடுக்கப்பட்ட கலிபோர்னியா முகவரி உறவினர்களோ, பொது பாதுகாப்பு உதவியாளரோ தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.

இறக்கிவிடப்பட்ட பயணி

கொபக்கை இறக்கிவிட்ட பின்னர் கிளம்பிய இந்த விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தது என்று விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான மிச்சேல் மொஹர் தெரிவித்தார்.

போதை ஆசாமிகள்

நம் ஊரில் பேருந்தில் பயணம் செய்யும் போது போதையில் உளறி கலாட்டா ஏற்படுத்தும் குடிகார ஆசாமிகளை நடுவழியில் இறக்கிவிட்டு அலறவைப்பார்கள் கண்டக்டர்கள். இது விமானம் என்பதால் சொந்த ஊரில் இறக்கிவிடப்பட்டார் அந்த பயணி.

English summary
A disorderly passenger who forced a flight to London to return to Philadelphia International Airport overnight is facing federal charges for causing a disturbance on the plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X