For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெயில் அடிக்க வேண்டிய நேரத்தில் குளிர்.. குளிர வேண்டிய இடத்தில் வெயில்..

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் வட பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக வித்தியாசமான தட்பவெப்ப நிலையை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

வழக்கமாக இருப்பதை விட சற்று வித்தியாசமான வெப்ப நிலையை இந்தப் பகுதிகள் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள், மேற்கு ஐரோப்பிய பகுதிகளில் இந்த சமயத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

இதமான வெப்பநிலை:

இதமான வெப்பநிலை:

ஆனால் அங்கு தற்போது இதமான வெப்பநிலையே நிலவுகிறது.

கடும் வெப்பத்தில் வடக்கு ஐரோப்பா:

கடும் வெப்பத்தில் வடக்கு ஐரோப்பா:

அதேசமயம், வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதியிலும், வடக்கு ஐரோப்பாவிலும் இப்போது இதமான வெப்ப நிலைதான் காணப்படும். ஆனால் அங்கு கடும் வெப்பம் கொளுத்துகிறதாம்.

போலாந்தில் அதிகமாம்:

போலாந்தில் அதிகமாம்:

லாத்வியா, போலந்து, பெலாரஸ், எஸ்தோனியா, லிதுவேனியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஜூலை கடைசியிலும், ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதாவது பாரன்ஹீட்டில் இது 95 டிகிரியாக இருந்தது. இது வழக்கத்தை விட அதிகமாகும்.

வறண்டு போன வனப்பகுதிகள்:

வறண்டு போன வனப்பகுதிகள்:

இந்த கடும் வெயில் காரணமாக சைபீரியாவில் உள்ள பல பகுதிகளில் காட்டுத் தீ மூண்டுள்ளது. பல வனப்பகுதிகள் வறண்டு போயுள்ளன.

வறண்ட வெப்பநிலை:

வறண்ட வெப்பநிலை:

அமெரிக்காவில் ஓரிகான், வாஷிங்டன், கலிபோர்னியாவிலும், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்ட்டா, வார்த்வெஸ்ட் பகுதிகளிலும், ஸ்வீடனிலும் வறண்ட வெப்பநிலையே காணப்பட்டது.

குளிர் காற்று வீசும் அமெரிக்கா:

குளிர் காற்று வீசும் அமெரிக்கா:

அதேசமயம், வடக்கு அட்சரேகைப் பகுதியிலிருந்து குளிர்ந்த காற்று கிட்டத்தட்ட அமெரிக்கா முழுவதும் வீசி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவு பகல் நேர வெப்ப நிலையும், இரவு நேர வெப்பநிலையும் குறைந்து காணப்படுகிறது. புளோரிடா மற்றும் ஜார்ஜியாவில் இந்த நிலை காணப்படுகிறது.

டென்னஸ்ஸி மலை குளிர்:

டென்னஸ்ஸி மலை குளிர்:

டென்னஸ்ஸி மலைப்பகுதிகளில் கடும் குளிர் காலம் போல சூழல் காணப்படுகிறது. அவ்வளவு குளிராக உள்ளது அங்கு.

வானியல் நிபுணர்கள் அறிக்கை:

வானியல் நிபுணர்கள் அறிக்கை:

வெப்ப அலை மற்றும் வெப்ப நிலை குறைவதற்கான காரணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த தட்பவெப்ப மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என வானியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

English summary
If you live in the northern hemisphere, the past few weeks have been strange. In places where it should be seasonably hot—the eastern and southern United States and western Europe—it’s just been warm. In places where weather is usually mild in the summer—northern Europe, the Pacific coast of North America—it has been ridiculously hot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X