For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடவுள் சிவனின் பெயரில் பீர்: அமெரிக்க நிறுவனத்தின் குசும்பு

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சிவா

சிவா

ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்துள்ள பீர் ஒன்றுக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்து சிவா பீர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. மேலும் பீர் பாட்டிலில் சிவன் நடராஜர் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒட்டியுள்ளது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

பீருக்கு சிவனின் பெயரை வைத்து அவரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மதத்தில் சிவன் போற்றப்படும் தெய்வம். அவரை கோவில்களிலும், பூஜை அறைகளிலும் வைத்து பூஜிக்க வேண்டுமே தவிர வியாபார பேராசையால் அவரது பெயரையும், படத்தை பீருக்கு பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்காவில் உள்ள இந்து அரசியல் தலைவர் ராஜன் ஜெட் தெரிவித்துள்ளார்.

காளிமா

காளிமா

முன்னதாக அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்த பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர் வைத்ததுடன் பாட்டிலில் காளியின் புகைப்படத்தை ஒட்டி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர்

விநாயகர்

ஆஸ்திரேலியாவைச் சேரந்த ப்ரூக்வேல் யூனியன் ப்ரூவரி என்ற நிறுவனம் தான் தயாரித்த ஜிஞ்ஜர் பீர் பாட்டில் லேபிள்களில் இந்து கடவுள்களான விநாயகர் மற்றும் லட்சிமியின் படங்களை பயன்படுத்தியது. லேபிள்களில் லட்சுமியின் உடலில் விநாயகரின் தலை இருப்பது போன்று வைத்திருந்தது. பின்னர் தனது செயலுக்காக அந்நிறுவனம் மன்னிப்பும் கேட்டது.

English summary
Hindus have urged US based Asheville brewing company to appologise and withdraw its beer carrying hindu deity Shiva's name and image.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X