For Daily Alerts
Just In
அமெரிக்காவில் இரவு விடுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு: 28 பேர் படுகாயம்
ஆர்கன்சாஸ்: அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் இரவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. லிட்டில் ராக் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் இரவு விடுதிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 16 வயது சிறுவன் உட்பட 28 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாதிகளின் தாக்குதலா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!