For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசிய விமானத்தைத் தேட 4 மில்லியன் டாலர் செலவழிக்கும் அமெரிக்கா

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகுக்கே புரியாத புதிராய்ப் போன மலேசிய விமானத்தைத் தேட அமெரிக்க 4 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

மார்ச் 8-ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன் விமானத்தை தேடும் பணியில் 28 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

US allots 4 million dollars to search Malaysian flight

ஆனால் அந்த விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்தில், "காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமமெரிக்க விமானங்கள் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை விமானத்தைத் தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்காக அமெரிக்க போட்டுள்ள பட்ஜெட் 4 மில்லியன் டாலர் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The US govt has allotted 4 million dollars for the searching operations of Malaysian flight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X