For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்தம்மா எப்படி ஓரினச்சேர்க்கையாளர் கூட்டத்திற்கு போகலாம்: யு.எஸ். தூதரை வறுத்தெடுக்கும் ஜோர்டான்

By Siva
Google Oneindia Tamil News

அம்மான்: ஜோர்டானுக்கான அமெரிக்க தூதர் ஆலிஸ் ஜி. வெல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜோர்டானுக்கான அமெரிக்க தூதர் ஆலிஸ் ஜி.வெல்ஸ். அவர் அண்மையில் ஜோர்டான தலைநகர் அம்மானில் நடந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஓரினச்சேர்க்கையாளர் நிகழ்ச்சியில் ஆலிஸ் கலந்து கொண்டதற்கு ஜோர்டான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

US ambassador’s visit to LGBT event sparks outrage in Jordan

மேலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் ஆலிஸை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் அரபு சமூகங்களை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டானில் உள்ள மக்களில் 97 சவீதம் பேர் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓரினச்சேர்க்கையாளர் ஆர்வலர் அலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில்,

ஆலிஸ் போன்ற ஒரு முக்கியமான நபர் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது பெருமையாக உள்ளது. ஜோர்டான் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆலிஸ் ஆதரவு அளித்துள்ளது ஆறுதலாக உள்ளது என்றார்.

அனுமதி பெறாமல் நடந்த ஓரினச்சேர்க்கையாளர் நிகழ்ச்சியில் ஆலிஸ் எப்படி கலந்து கொள்ளலாம் என்று கூறி ஜோர்டான் வழக்கறிஞர் அபு ராகேப் வழக்கு தொடர முயன்றார். அபு ராகேப் அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தாத காரணத்திற்காக சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் மீதும் வழக்கு தொடர முயன்றார்.

English summary
Jordan ministers, parliament members and political party leaders have condemned US ambassador Alice G. Wells for attending LGBT meet held in Amman recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X