For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

26/11.. ஒன்னுமே தெரியாதது போல நடிக்க அமெரிக்காவால மட்டும்தான் முடியும்!

தீவிரவாதிகள் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் வழங்க அமெரிக்க அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டையே அதிர வைத்த மும்பை தாக்குதல் நடைபெற்ற தினம் இன்று

    வாஷிங்டன்: ஒன்னுமே தெரியாதது போல நடிக்க அமெரிக்காவால மட்டும்தான் முடியும்!!

    மும்பை தாக்குதல் நடந்து இன்றோடு 10 வருஷம் ஆகிவிட்டது. இதையொட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் ஆர்.போம்பியோ செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, "இந்த தாக்குதலில் உயிரிழந்த 6 அமெரிக்கர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாங்கள் துணை நிற்போம்.

    5 மில்லியன் டாலர்

    5 மில்லியன் டாலர்

    10 ஆண்டுகள் ஆன போதும் இதற்கு திட்டமிட்டவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு திட்டம் தீட்டியவர்கள் அல்லது அதற்கு உதவியர்கள் குறித்து தகவல் தந்தால் அமெரிக்காவின் நீதிக்கான வெகுமதி துறை சார்பில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

    பழி வாங்க துடிப்பு?

    பழி வாங்க துடிப்பு?

    5 மில்லியன் டாலர் என்றால் கிட்டத்தட்ட நம்ம நாட்டு மதிப்புப்படி 35 கோடி ரூபாய் ஆகும். உயிரிழந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் இறந்து போனதை இன்றுவரை அமெரிக்கா மறக்கவில்லை என்பதைதான் இந்த அறிவிப்பு காட்டுகிறது. தன் நாட்டை சேர்ந்த 6 பேரைக் கொன்றவர்களை பழிவாங்க துடிப்பதன் ஆதங்கமே இந்த அறிவிப்பு. ஆனால் இன்று வரை எல்லையில் நம் வீரர்கள் கொடூரமாக தூண்டப்படுவதற்கு எந்த விடையும் காணோம்.

    என்ன பதில்?

    என்ன பதில்?

    பாகிஸ்தானை தூண்டி விட்டு தூண்டிவிட்டே இன்று வரை அமெரிக்கா தன் பயங்கரத்தை நடத்தி வருகிறது. 10 வருஷம் ஆனாலும் 6 பேர் மரணத்துக்கு பழி வாங்க ஆர்வதோடு காத்திருக்கும் அமெரிக்கா இந்திய எல்லையில் தினந்தோறும் சுட்டும், வெட்டியும், தாக்கியும் கொன்று வருவதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?

    லக்‌ஷர் தொய்பா

    லக்‌ஷர் தொய்பா

    இதில் 2 விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானில் ஒளிந்து வாழ்ந்து வந்த ஒசாமா பின் லேடனையே கண்டுபிடித்துவிட்ட இவர்களால், மும்பை தீவிரவாதிகளை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இப்படித்தான் 2012-ம் ஆண்டும் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் பகிரங்கமாக உலவி வரும் லக்ஷர் தொய்பா தலைவர்களை பற்றி சொன்னால் பரிசு என்றார்கள். இந்த அறிவிப்பும் வினோதமானதே.

    ஏன் தூக்கு?

    ஏன் தூக்கு?

    இரண்டாவது விஷயம், இன்னும் யார் தீவிரவாதிகளே தெரியவில்லை என்றால், கசாப் என்பவர் யார்? எதற்காக அவரை தூக்கில் போட்டார்கள்? ஒருவேளை அவர்தான் குற்றவாளி என்று தெரிந்து விட்டாலும், மற்றவர்களை பிடிக்கும்வரை அவரை உயிருடன் வைத்திருக்கலாமே? ஏன் அவசர அவசரமாக தூக்கில் போட வேண்டும்?

    நடிக்கும் அமெரிக்கா

    நடிக்கும் அமெரிக்கா

    இவர்கள்தான் கொன்றார்கள், இவர்கள்தான் படகில் வந்தார்கள் என்று அப்பட்டமாக தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல நடிக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்.

    English summary
    26/11.. US Announces 5 Million Dollar Reward for information
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X