For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க க்ரீன் கார்டு விண்ணப்பிக்க புதிய சலுகை: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு:எஸ்): அமெரிக்க க்ரீன் கார்டு விண்ணப்பிக்க புதிய சலுகையை சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை (USCIS) மற்றும் சுங்கத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம், 2011ம் ஆண்டு ஜுலை 1ம் தேதிக்குள், க்ரீன் கார்டுக்கான முதல் நிலை விண்ணப்பம் (Labor filing) பதிவு செய்தவர்கள், இப்போது மூன்றாம் நிலை விண்ணப்பம் (I-485) பதிவு செய்ய முடியும்.

US announces new Green card offer

வேலை வாய்ப்பு மூலம், அமெரிக்க க்ரீன் கார்டு பெறுவதற்கு மூன்று நிலை விண்ணப்பங்கள் பதிவு செய்யவேண்டும்.

முதலாம் நிலை, உள்ளூரில் குறிப்பிட்ட வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து, விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்வதாகும். உள்ளூர் தொழிலாளர் துறை அதை சரிபார்த்து, விண்ணப்பதாரருக்கு முதல் நிலை அனுமதி (Labor Certificate) வழங்கும்.

இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பில் இரண்டாம் நிலை (I-140) விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்தின் குறிப்பிட்ட வேலைக்கு, உள்ளூரில் தேர்வு செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதா எனவும் , நிறுவனத்தின் நிதி நிலை, குறிப்பிட்ட வேலைக்கான அவசியம் போன்ற விவரங்களை சரிபார்த்து, அனுமதி வழங்கப்படும்.

மூன்றாம் நிலை (I-485) விண்ணப்பம் பதிவு செய்ய, அமெரிக்க உள்துறை அமைச்சகம், சுங்க - குடியேற்ற துறைக்கு விசா எண்ணிக்கையை வழங்க வேண்டும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விசாக்களைக் கொண்டு க்ரின் கார்டு வழங்குவார்கள்.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட விசா எண்ணிக்கை மட்டுமே அனுமதிக்கப்படுவதோடு, ஒவ்வொரு நாட்டு குடிமக்களுக்கும் அவை பிரித்துக் கொடுக்கப்படும். இந்தியர்கள் அதிக அளவில் விண்ணப்பதிப்பதால், சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை, க்ரீன் கார்டு விசாவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது இந்த விதிமுறையை மாற்றி, விசா எண்ணிக்கை இல்லாவிட்டாலும், மூன்றாம் நிலை(I-485) விண்ணப்பம் பதிவு செய்யலாம் என்ற புதிய விதியை சுங்க - குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. மூன்றாம் நிலை விண்ணப்பித்த 6 மாதம் கழித்து, வேறு நிறுவனத்திற்கு அதே வகை வேலைக்கு மாற முடியும். வெளி நாட்டு பயணத்திற்கு அனுமதியும் கிடைக்கும்.

டெக்னாலஜி துறையில் உள்ள இந்தியர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு , க்ரீன் கார்டு கிடைக்குவரை, க்ரீன் கார்டு வசதிகளை அனுபவிக்க இடைக்கால நிவாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்க உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: http://travel.state.gov/content/visas/english/law-and-policy/bulletin.html

English summary
USCIS, in coordination with Department of State (DOS), is revising the procedures for determining visa availability for applicants waiting to file for employment-based or family-sponsored preference adjustment of status.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X