For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய பெருமைக்குரிய... நாசா விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி ஓய்வு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அதிகநாட்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் பணி புரிந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி மைய (நாசா) பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 340 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த இவர், கடந்த மாதம் தான் விண்வெளியில் ஆய்வு முடித்து பூமி திரும்பினார்.

இந்நிலையில், இம்மாதம் ஒன்றாம் தேதியோடு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

விதவிதமான போட்டோக்கள்...

விதவிதமான போட்டோக்கள்...

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்தபோது, பூமியை விதவிதமாக புகைப்படங்களாக எடுத்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டவர் ஸ்காட் கெல்லி.

வித்தியாசமான வீரர்...

வித்தியாசமான வீரர்...

இது தவிர சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கீரை பயிரிட்டது, கொரில்லா உடையணிந்து சக வீரரை பயமுறுத்தியது என எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

ஓய்வு...

ஓய்வு...

இந்நிலையில், ஏப்ரல் 1-தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 20 வருடங்களாக நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றினேன். "குட் பை நாசா" 2 வருடமாக வெண்வெளியில் இருந்த போது மிகவும் சவாலாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

520 நாட்கள்...

520 நாட்கள்...

ஸ்காட் கெல்லி விண்வெளியில் மொத்தமாக 520 நாட்கள் தங்கி இருந்துள்ளார். விண்வெளியில் தங்கியிருந்த போது 3 முறை பூமிக்கு மேலாக மிதந்துள்ளார்.

10,880 சூரிய உதயம்...

10,880 சூரிய உதயம்...

தனது ஆய்வுக் காலத்தில் அவர் விண்வெளியில் 144 மில்லியன் மைல் தொலைவை சுற்றி வந்துள்ளார். இது பூமியை 5 ஆயிரத்து 440 முறை சுற்றுவதற்கு சமம் ஆகும். இந்த நேரத்தில் அவர் 10,880 சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்களை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA astronaut Scott Kelly, who recently completed a year-long mission on the International Space Station (ISS) during his 20-year-long association with the US space agency, retired on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X