For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழப் போர்: பிரபாகரனை உயிருடன் மீட்க முயன்றதா அமெரிக்கா?.. பரபரப்பு தகவல்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயற்சித்ததா? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயற்சித்ததா? என்பது குறித்து இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர்கள், இலங்கையைச் சேர்ந்த அமெரிர்க்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் ராபர்ட் பிளேக் பேசியதாவது:

இந்தியாவுடன் இணைந்து

இந்தியாவுடன் இணைந்து

இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் இருந்தது. இந்தியா, இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா இத்திட்டத்தை செயல்படுத்த இருந்தது.

பிணைக்கைதி மிரட்டல்

பிணைக்கைதி மிரட்டல்

ஆனால் இலங்கை அரசோ, என்னையும் நார்வே தூதராக இருந்த எரிக் சொல்ஹொய்மையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைப்பார்கள். ஆகையால் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சாகடித்துவிட்டது.

புலிகள் செய்யமாட்டார்கள்

புலிகள் செய்யமாட்டார்கள்

எங்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அப்படி எங்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைப்பார்கள் என நம்பவே இல்லை. ஆனால் இலங்கை அரசு இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தது.

பிரபாகரனை மீட்க முயற்சியா?

பிரபாகரனை மீட்க முயற்சியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மீட்கின்றன முயற்சியாகவும் இலங்கை கருதியிருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் கடற்படை படகுகள் மூலம் மக்களை மீட்டு இலங்கையின் கட்டுப்பாட்டு பகுடிக்குள் கொண்டு செல்லவே திட்டமிட்டிருந்தோம்.

அமெரிக்காவின் எண்ணம்

அமெரிக்காவின் எண்ணம்

விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்யும் எண்ணம் அமெரிக்காவுக்கு இருந்தது இல்லை. இலங்கை அரசுதான் அப்படி நினைத்துக் கொண்டது. இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.

சிவசங்கர் மேனன் கருத்து

சிவசங்கர் மேனன் கருத்து

அண்மையில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனைக் காப்பற்ற அமெரிக்காவும் நார்வேயும் முயற்சித்தது. ஆனால் இந்தியா கடுமையாக எதிர்த்தது. இதனைத் தமிழக தலைவர்களும் கூட ஆதரித்தனர் என தம்முடைய புத்தகத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The then US Ambassador for Srilanka Robert O. Blake said that they attempted to save only Tamils not LTTE leader Prabhakaran in 2009 Final war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X