For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Video : அனுபவம் புதுமை In அமெரிக்கா: ஹேப்பி பர்த்டே அமெரிக்கா.. போட் விட்டு ஜாலி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாம் எல்லாரும் ஹாப்பி பர்த்டே என்றால் எவ்வளவு குஷி ஆவோமோ அப்படி தான் ஜூலை 4ம் தேதி எல்லா அமெரிக்கர்களும் படு குஷியாக கொண்டாடி மகிழ்ந்தனர். காரணம் அன்றுதான் அமெரிக்கா பிறந்த தினம்.

நாம் எல்லாம் ஆகஸ்ட் 15 அன்று எவ்வளவு உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடுவோமோ அப்படி தான் அமெரிக்கர்கள் ஜூலை 4ம் தேதி உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கும் சுதந்திர நாளா என்று பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆமாங்க ஆமா. அவங்களும் அடிமையா இருந்து சுதந்திரம் பெற்றவர்கள்தான்.

US celebrates its independence day

நம்ம ஊரு மாதிரி கோடி கம்பத்தில் மட்டும் தேசிய கொடி இருப்பதில்லை. தேசிய கொடி இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். வீட்டு முற்றத்தில், காரில் என்று எல்லா இடமும் கோடி தான். அது மட்டுமா அமெரிக்க மக்கள் தொப்பி , சட்டை ,படகு , விசிறி ,கம்மல், ஹேர் கிளிப் என்று ஒரு இடம்
விடாமல் அமெரிக்கா கொடி சகிதமாக தான் காட்சியளிக்கிறார்கள்.

US celebrates its independence day

சுதந்திர தினம் என்பதை அமெரிக்காவின் பிறந்த நாள் என்று ரொம்ப உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். அன்று சூப்பரான போட்டிகள் பல நடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் அலங்கரிப்பட்ட படகுகளோடு பேரணிகள் நிகழ்த்தப்படுகிது.

US celebrates its independence day

அப்படி அமெரிக்காவின் அழகான ஒரு நதியில் தேசிய கொடியால் அலங்கரிப்பட்ட படகுகளுக்குள் நடந்த சூப்பர் ரேஸ் மற்றும் சூப்பர் காட்சிகளின் வீடியோ தொகுப்பு. இந்த வீடியோவில் உங்களுக்காக.


(அமெரிக்காவின் சுவாரஸ்ய பக்கங்கள் இன்னும் விரியும் ...)

- Inkpena சஹாயா

English summary
US celebrated its independance day on July 4 with usual fervour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X