For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்ரவரிக்குள் மோடியின் விசா ஆவணங்களை சமர்பிக்க நியூயார்க் கோர்ட் உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு நியூயார்க் கோர்ட் உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளால் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து, அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவரது சுற்றுலா விசா 2005-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு மோடி இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது.

us court seeks pm modi visa record by february

இந்நிலையில் மோடிக்கு வழங்கப்பட்ட விசா நடைமுறைகள் குறித்த ஆவணங்களை, தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் தருமாறு, அமெரிக்காவில் இயங்கும் சீக்கிய அமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியது. எனினும், ஆவணங்களை அரசு தராததால் அந்த அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபமா ஆகியோரது ஆட்சி காலத்தில் மோடிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் தடைநீக்கம் குறித்த முக்கியமான ஏழு ஆவணங்களை கேட்டு அந்த அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை கடந்த 9-ம் தேதி விசாரித்த நீதிபதி, மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது

English summary
American court asks for Prime Minister Narendra Modi's US visa records by February
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X