For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிலரி க்ளிண்டன் அதிபர் ஆனால்?- கலிஃபோர்னியாவிலிருந்து அனு நடராஜன் சிறப்புப் பேட்டி!

By Shankar
Google Oneindia Tamil News

-இர தினகர்

அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட தளத்தில் நிலை கொண்டுள்ளது.

அரசியல் பதவிகளில் அனுபவம் இல்லாத டொனால்ட் ட்ரம்ப், சொந்த கட்சியினர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கி குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார்.

30 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஹிலரி க்ளிண்டன், பெரிய கட்சிகளின் சார்பில் போட்டியி்டும் முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்று ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

கொள்கை மோதல்களை விட தனிப்பட்ட முறையில் ஒருவரைப் பற்றி மற்றவரின் குற்றச்சாட்டுகள் முக்கிய .இடம் பெற்றது. நவம்பர் 8 செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில். கலிஃபோர்னியாவிலிருந்து 'ஒன் இந்தியா தமிழுக்காகட அனு நடராஜனின் சிறப்பு பேட்டி...

US election: Anu Natarajan's Interview from California

அனு நடராஜன், அமெரிக்க இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். ஃப்ரீமாண்ட் நகர துணை மேயராக திறம்பட பணியாற்றி DART உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியவர். 'டெஸ்லா மோட்டார்ஸ்' நிறுவனத்தை ஃப்ரீமாண்ட் நகருக்கு கொண்டு வந்ததிலும் அனுவுக்கு பெரும் பங்கு உண்டு.

அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரி க்ளிண்டனின் ஜனநாயகக் கட்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

ஒன் இந்தியா தமிழ்: இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் பெண்கள் தொடர்பான சர்ச்சைகள் பற்றிய விவாதங்கள் முக்கிய இடம்பெற்றது. குறிப்பாக அவருடன் பில்லி புஷ் இடம்பெற்ற வீடியோ பேச்சு இந்த தேர்தலின் முக்கிய அம்சம் ஆகி விட்டது. இந்த திருப்பம் வராமல் இருந்திருந்தாலும் ஹிலரி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா ?

அனு : டொனால்ட் ட்ரம்பின் வீடியோவை தனிப்பட்ட நிகழ்வாக பார்க்கக் கூடாது அல்லது இரு ஆண்களின் தனிப்பட்ட பேச்சாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

உலகத்தின் அதிமுக்கியமான, அமெரிக்காவின் உயர்ந்த பதவியான அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருடைய நன்னடத்தையின் சான்று அந்த வீடியோ அமெரிக்காவின் பெண் அதிபர் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகத் தான் இருந்துள்ளது.

தற்போது முதல் பெண் அதிபர் தேர்ந்தடுக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள இந்த நேரத்தில், பெண்களை பாலியல் தாக்குதல் செய்தவரும், பெண்களை மிகவும் ஆபாசமாகவும், போகப் பொருளாகவும், சித்தரிக்கும் ஒருவர் எதிரணியின் வேட்பாளர் என்பது துரதிர்ஷ்டவசமானது.

US election: Anu Natarajan's Interview from California

ஒன் இந்தியா தமிழ் : ஹிலரி க்ளிண்டன் ஏன் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கு என்ன நன்மை என்று கூறுங்களேன்.

அனு: ஹிலரியின் 30 ஆண்டுகால மக்கள் சேவைக்காகவே அவர் கட்டாயம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவராகிறார். இந்த நாட்டுக்கு அவர் செய்துள்ள சேவை அளப்பரியது. அவர் மீது வீசப்பட்ட குற்றச்சாட்டுகளை பொது விசாரணை மேடையில் தைரியமாக எதிர்கொண்டார்.

அவருடைய கண்ணியத்தை ஊடகங்கள் சந்தேகத்துடன் ஒரு தலைப்பட்சமாக பரப்புரை செய்தன. வரலாறு காணாத அளவுக்கு அவருடைய 'நம்பிக்கைத் தன்மை' பற்றி அவதூறுகள் பரப்பப் பட்டன.

பொய்யை திரும்பப் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்ற பழமொழிக்கு ஹிலரி மீது பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் மிகப்பெரிய உதாரணம்.

ஹிலரியின் அனுபவங்களும், எதையும் நிதானத்துடன் அணுகும் தன்மையும் அமெரிக்க அதிபராக நாட்டை வழி நடத்த உதவும். அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றெல்லாம் யாரும் கிடையாது. இருப்பவர்களில் சரியானவரை தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை.

ஒன் இந்தியா தமிழ்: இந்தியாவின் புதிய தோழன் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளாரே! ஹிலரி க்ளிண்டன் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நன்மையா?

அனு: இந்தியாவுடனும், அமெரிக்க இந்தியர்களுடனும் ஹிலரி க்ளிண்டனும், பில் க்ளிண்டனும் நீண்ட காலம் நல்ல நட்புறவு கொண்டவர்கள்.

அதிபர் ஒபாமாவுடன் இந்தியா கொண்ட நட்பு போல், ஹிலரியின் ஆட்சியிலும் இந்தியாவின் நட்புறவு நீடிக்கும். ஒபாமாவின் ஆட்சியில் செய்தது போல், இந்திய அமெரிக்கர்கள் அனைவரும் ஹிலரியின் ஆட்சியிலும், அமெரிக்க இந்திய பரஸ்பர நட்புறவுக்கு தொடர்ந்து உறுதுணையாக செயல்பட வேண்டும்.

US election: Anu Natarajan's Interview from California

ஒன் இந்தியா தமிழ்: காங்கிரஸ் அவையிலும் செனட் அவையிலும் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றிருந்ததால் ஒபாமாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுந்து வந்துள்ளனர். ஹிலரி அதிபர் ஆனாலும் அந்த நிலை தொடருமா?

அனு : குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை ஹிலரிக்கு தலைவலியைக் கொடுக்கும். அவர்கள் ஏதாவது தொந்தரவு கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
மக்களின் பெரும்பான்மை ஆதரவு ஹிலரிக்கு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போது, குடியரசுக் கட்சியினர் மக்களின் முடிவுக்கு கட்டுப் பட்டவர்கள் ஆகிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் உட்பட முக்கிய முடிவுகளுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால், அமெரிக்க மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் அவருடைய சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரும்

பின்னடைவை ஏற்படுத்தி உள்ளார். அதுவே காங்கிரஸ் செனட் தேர்தலில் அக் கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

ஒன் இந்தியா தமிழ் : உங்கள் நண்பரும் தமிழ் வம்சாவளியினருமான கமலா ஹாரிஸ்,

கலிஃபோர்னியா செனட் தேர்தலி போட்டியிடுகிறாரே!. அவருடைய வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. அவரது திட்டங்கள் பற்றி கூற முடியுமா?

அனு : கமலா மிக நேர்த்தியாக இந்த தேர்தலை அணுகியுள்ளார். மிகவும் திறம்பட தேர்தல் பணியாற்றியுள்ளார். செனட்டராக, கலிஃபோர்னியாவின் அதி முக்கியமான பிரதிநிதியாக அவர் செயலாற்றுவார். அவருடைய வெற்றி நம் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பெருமையை தேடித் தர உள்ளது.

ஒன் இந்தியா தமிழ்: உங்களுடைய எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி சொல்ல முடியுமா? கலிஃபோர்னியா காங்கிரஸ், செனட் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் திட்டம் உள்ளதா?

அனு : அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன. மக்கள் சேவை என்பது என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒய்வு இல்லாமல் ,தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிக் கொண்டு இருப்பேன்.

ஒன் இந்தியா தமிழ் : ஹிலரி க்ளிண்டனுக்காக அதிபர் தேர்தல் மற்றும் கமலா ஹாரிஸுக்காக செனட் தேர்தல் என்று இரண்டு தேர்தல் களங்களில் பம்பரமாக களப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஒன் இந்தியா வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்களுடைய மக்கள் பணி வெற்றிகரமாக தொடர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனு : நன்றி. ஆசிரியர் குழு, நிர்வாகத்தினர் மற்றும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

English summary
Anu Natarajan, one of the US Tamil political leaders exclusive interview on US Presidential elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X