For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ் தேர்தல் ரிசல்ட் லேட்டஸ்ட் நிலவரம்.... ஹிலரி க்ளிண்டன் 190, ட்ரம்ப் 172

ஓஹோயோவில் டொனால்ட் ட்ரம்ப் 53 சதவீதம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அங்கு அவருக்கு வெற்றி உறுதியாகி உள்ளது.

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதைய நிலவரப்படி ஹிலரி க்ளின்டன் கை ஓங்கியிருக்கிறது. அவர் 190 அதிபர் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். ட்ரம்புக்கு 172 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஓஹோயோவில் டொனால்ட் ட்ரம்ப் 53 சதவீதம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அங்கு அவருக்கு வெற்றி உறுதியாகி உள்ளது.

US election results: Trump leads with 49.1 percent votes

மிஷிகனிலும் ட்ரம்புக்கு வெற்றி முகம் தெரிகிறது.

அருகருகே உள்ள இரு மாநிலங்களும் தொழில் நிறுவனங்களின் இடப்பெயர்வால் வேலை இல்லாத் திண்டாடத்தில் பாதிக்கப்பட்டவையாகும்.

இரண்டு மாநிலங்களிலும் கட்சி பாகுபாடின்றி ட்ரம்பின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

இழுபறியாகத் தெரிந்த வர்ஜீனியா மாநிலத்தில் ஹிலரிக்கு வெற்றி முகம் தெரிகிறது. அவருடைய துணை அதிபர் டிம் கெய்ன் வர்ஜீனியாவின் முன்னாள் கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய நிலவரப்படி ஹிலரி 190 அதிபர் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் சதவீதம் 49.1. ஹிலரிக்கு 131 இடங்கள் கிடைத்துள்ளன. வாக்குகள் சதவீதம் 46.5.

வடக்கு கரோலைனா, ப்ளோரிடா, மிஷிகன் போன்ற மாகாணங்களில் இன்னும் இழுபறியே நீடிக்கிறது. இங்கு தெளிவான முடிவுகள் கிடைத்தால் அதிபர் யார் என்பது உறுதியாகிவிடும்.

-நமது செய்தியாளர்

English summary
As per the latest reports, the Republican candidate Donald Trump has secured 49.1 votes with 168 electoral votes in the US elections. Democratic candidate Hillary Clinton is trailing with 131 electoral votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X