For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2005 ல் பெண்களை கொச்சையாக விமர்சித்த விவகாரம்... பெரும் சிக்கலில் ட்ரம்ப்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கத் தேர்தலில், எதிர்பாராத ஒரு சின்ன சறுக்கல் கூட எதிரணிக்கு சாதகமாகி விடுவது வழக்கம்.

நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு, அக்டோபரில் இப்படி ஏதாவது ஒரு சறுக்கல் ஏற்பட்டால் அதை அக்டோபர் சர்ப்ரைஸ் என்று அழைக்கும் அளவுக்கு முந்தய தேர்தல் வரலாறு சாட்சியாக இருக்கிறது. கால அவகாசம் இல்லை என்பதால், இந்த சிக்கலிலிருந்து மீண்டு வர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அதாவது மக்களை மறக்க வைப்பதற்கு கால அவகாசம் இல்லை என்பது தான் உண்மை.

கடந்த தேர்தலில், ஒரு தனியார் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் 47 சதவீத மக்களைப் பற்றி கவலைப்படத் தேவை இல்லை என்று மிட் ராம்னி பேசிய பேச்சின் வீடியோ வெளியானது முதல், அவருக்கு இறங்குமுகம் ஆகிவிட்டது. ஒபாமாவிடம் தோற்றும் விட்டார்

US elections: Trump in big trouble

சிக்கினாரா ட்ரம்ப்?

தற்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை, ட்ரம்ப் 2005 ஆம் ஆண்டு பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. திருமணமான ஒரு பெண்ணை, பாலியல் உறவுக்கு முயற்சி செய்தேன்

என்றும், செக்ஸியான பெண்ணைப் பார்த்தால், எப்படியும் கிஸ் பண்ணிவிடுவேன், பிரபலமாக இருப்பதில் உள்ள சவுகரியம் அது. அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் என்று ட்ரம்ப் பேசியதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பெண்களை பன்றி, வேலைக்காரி என்றெல்லாம் அவதூறாகப் பேசியதாக ஹிலரி தரப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன், விளம்பரத்திலும் அதை ஒளிபரப்பி வருகிறார்கள்.

தற்போதைய வீடியோ, பெண்கள் ட்ரம்பை அறுவருப்புடன் பார்க்கும் அளவுக்கு கொண்டு நிறுத்தியுள்ளது. ஹிலரியின் துணை அதிபர் வேட்பாளர் டிம் கெய்ன். ட்ரம்பின் பேச்சைக் கேட்ட பிறகு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிககவிலும் பெண்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ட்ரம்பின் இந்த வீடியோ மூலம் ஒட்டு மொத்த பெண்களும், ட்ரம்பிற்கு எதிராக வாக்களிக்கும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மன்னிப்புக் கேட்டார்

தேர்தல் காலம் ஆரம்பித்த கடந்த 16 மாத காலத்தில் எந்த ஒரு காரணத்திற்காகவும் மன்னிப்பு கேட்காத ட்ரம்ப், முதல் முறையாக மன்னிப்புக் கேட்டுள்ளார். "அது தனிப்பட்ட உரையாடல். பில் க்ளிண்டன் கோல்ஃப் மைதானத்தில் இதை விட மோசமாக என்னிடம் பேசியிருக்கிறார். யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று அறிக்கை விடுத்துள்ளார்.

US elections: Trump in big trouble

கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானதாகும், தற்போதைய சர்ச்சையால் ட்ரம்பின் தேர்தல் குழுவினர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். "இது நடந்திருக்ககூடாது. இந்த தேர்தல் கைவிட்டு போய் விட்டது," என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு என்பது மேலும் பிரச்சனையை பெரிதாக்கும், 'வார்த்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கேட்டிருந்தால், ஓரளவுக்கு மக்கள் முன் எடுபட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

லத்தீன் இன மக்கள், இஸ்லாமிய அமெரிக்கர்கள், பெண்கள் என ஒட்டு மொத்த வாக்கு வங்கிகளே தகர்ந்து வருவதால் ட்ரம்பின் வெற்றி சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.

நாளை நடைபெற உள்ள இரண்டாவது விவாதத்தில் ஹிலரி இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்குவார் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

2005 வீடியோ தான் 2016 அக்டோபர் திருப்பமா? அல்லது இன்னும் திருப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவா?. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பரபரப்பு பற்றிக்கொண்டு வருகிறது.

-இர தினகர்

English summary
A video clip released by Washington Post in which Trump is making sexual comment about a married woman has become a biggest controversy of this year election. This alienate women voters completely away from Trump. Looks like this video may be the October surprise of this election year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X