For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம்

Google Oneindia Tamil News

காபூல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே அடியாக மூழ்கிப் போய் ஆர்வ மிகுதியால் ஜெயிப்பதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி, வங்க தேசத்தை வீழ்த்தியதாக டுவிட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம்.

ஆப்கானிஸ்தான் - வங்க தேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியானது கான்பெராவில் இன்று நடைபெற்று வருகின்றது.

US embassy prematurely declares Afghanistan's victory

போர்களுக்கு பெயர் போன நாட்டின் கிரிக்கெட் களமும் பல கோடி பேரினை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வளைதளங்களில் கட்டிப் போட்டுள்ளது.

இந்த நிலையில், நடைபெற்று வருகின்ற போட்டி பாதி தூரத்தினைக் கடப்பதற்குள்ளாகவே அமெரிக்க தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஆர்வ மிகுதியில் ஆப்கானிஸ்தான் "வெற்றி" என்று டுவிட் வெளியாகியது.

"உலக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தினை வீழ்த்திய ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்..." என்ற வார்த்தைகளைத் தாங்கி வெளியாகி இருந்தது அந்த டுவிட்.

இந்நிலையில் இந்த டுவிட் வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியதன் காரணமாக பெரும் சர்ச்சையினைக் கிளப்பி விட்டுவிட்டது. அதன்பின்னர் தவறை உணர்ந்த தூதரகமும் மன்னிப்பு கேட்டு மற்றொரு டுவிட்டையும் வெளியிட்டுள்ளது.

அதில் "முன்னதாகவே வெற்றி பெற்றதாக டுவிட் வெளியிட்டத்தற்கு மன்னிப்பு கோருகின்றோம். எனினும், ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாழ்த்துகின்றோம்" என்றும் தெரிவித்துள்ளது.

English summary
The US embassy in Kabul seemed to get caught up in the excitement of Afghanistan's ICC World Cup debut today, congratulating the side on victory just half-way through the Bangladesh innings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X