For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

160 கி.மீ வேகத்தில்.. பேஸ்புக்கில் லைவ் செய்தபடி காரோட்டிய வாலிபர்.. தாறுமாறாக மோதி படுகாயம்!

அமெரிக்காவில் பேஸ்புக்கில் லைவ் செய்தபடி படு வேகமாக காரோட்டிய வாலிபர் விபத்துக்குள்ளாக்கி படுகாயமடைந்தார்.

Google Oneindia Tamil News

புராவிடன்ஸ், ரோட் ஐலன்ட், அமெரிக்கா: அமெரிக்காவில் பேஸ்புக்கில் லைவ் செய்தபடி படு வேகமாக காரோட்டி வந்த வாலிபரால் பெரும் விபத்து ஏற்பட்டது. கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

ரோட் ஐலன்ட் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான ஒனாசி ஒலியோ ரோஜாஸ். இவர் புராவிடன்ஸ் என்ற நகரில் நெடுஞ்சாலையில் அதி வேகமாக காரை ஓட்டியபடி வந்தார். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அப்போது பேஸ்புக்கிலும் அதை லைவ் செய்துள்ளார்.

US man crashes car while doing Facebook live, Watch here

சாலையில் அதி வேகமாக, விதிமுறைகளுக்குப் புறம்பாக தாறுமாறாக ஓட்டிச் சென்ற அவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். கார் படு வேகமாக போய் குப்பை லாரி மீதும், கான்க்ரீட் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் ஒனாசி படுகாயமடைந்தார்.

மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. காரிலிருந்து மீட்கப்பட்ட ஒனாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை ஒனாசி படு வேகமாக ஓட்டியபடி லைவ் செய்த வீடியோ அவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ளது. இது தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.

English summary
A man in US city of Rhode Island who was streaming himself on Facebook Live speeding and weaving in and out of traffic was seriously injured when he crashed into a garbage truck and a concrete barrier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X