For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலிபான் ஆட்டமா? எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்!

ஆப்கானிஸ்தானில் நேற்று விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் தாலிபான் தாக்குதலால் நிகழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் தாலிபான் தாக்குதலால் நிகழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து நேற்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமானம் சென்றுள்ளது. அதன்பின் கீழே விழுந்து நொறுங்கியது.

ஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்கா இதை கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்கள் விமானப்படையின் Bombardier E-11A விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது, என்று அமெரிக்கா கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது.

 ஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன? ஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன?

நேற்று கீழே

நேற்று கீழே

இந்த நிலையில், நேற்று விழுந்து நொறுங்கிய இந்த விமானம் கீழே விழும் போது நெருப்பு பற்றி எரிந்து கொண்டு விழுந்துள்ளது. அதாவது விமானம் முழுக்க பெரிய அளவில் நெருப்பு இருந்துள்ளது. கீழே விழுவதற்கு முன்பே அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்த வண்ணம் காணப்பட்டது. இது தொடர்பாக நேரடி சாட்சியங்கள் சிலரும் உள்ளனர். தாலிபான் பகுதியில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

என்ன விமானம்

என்ன விமானம்

பொதுவாக ஒரு விமானம் கீழே விழும் முன் தீ பிடிக்கிறது என்றால் அதன் எஞ்சின் வெடித்து இருக்கும், அல்லது அந்த விமானம் தாக்கப்பட்டு இருக்கும். ஈரானில் விழுந்த உக்ரைன் விமானம் இப்படி கீழே விழும் போது தீ பிடித்துத்தான் எரிந்தது. அதன்பின் அது தொடர்பாக நிறைய சந்தேங்கங்கள் எழுந்தது. கடைசியில் அது விமான விபத்து இல்லை, ஈரானின் ராக்கெட் மோதிதான் விமானம் கீழே விழுந்து வெடித்தது என்று நிரூபணம் ஆனது.

ஆப்கானிஸ்தான் எப்படி

ஆப்கானிஸ்தான் எப்படி

தற்போதும் அதேபோல் ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து காபூலுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுக்க தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு அமெரிக்க விமானங்கள் ரோந்து செல்வது வழக்கம். அப்போதுதான் அமெரிக்காவின் போர்ப்படை விமானமான Bombardier E-11A கீழே விழுந்து நொறுங்கியது.

அமெரிக்க போர்ப்படை

அமெரிக்க போர்ப்படை

இதனால் தற்போது அமெரிக்கா போர்ப்படை விமானத்தை ஆப்கானிஸ்தானின் தாலிபான் தாக்கி அழித்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தாலிபான்கள் சிறிய ராக்கெட் லான்ச்சர்களை ஏவி தாக்கி அழித்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தாலிபான்கள் உடன் சமாதானமாக செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். அப்படி இருக்கையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பென்டகன் விசாரித்து வருகிறது.

தாலிபான் படை

தாலிபான் படை

கடந்த வருடம் தாலிபான் உடன் டிரம்ப் நடத்த இருந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. அப்போதே டிரம்ப் தாலிபான்களை கடுமையாக விமர்சித்தார். அதன்பின் தாலிபான்களும் அமெரிக்காவை கடுமையாக தாக்குவோம் என்று குறிப்பிட்டு இருந்தது. இதற்கு இடையில்தான் அமெரிக்க போர் விமானம் ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கி உள்ளது. ஆனால் இதற்கு தாலிபான்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை, அதேபோல் அமெரிக்காவும் இதை தாலிபான்கள்தான் செய்தது என்று கூறவில்லை.

English summary
US military plane crash may be an attack by the Taliban in Afghanistan soil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X