For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின் 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிகா கோக்லீ மார்டினெஸ். அவர் வேலை விஷயமாக இங்கிலாந்து வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர் தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார்.

US mom forced to dump 14.8 litres of breast milk at Heathrow airport

இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லிட்டர் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார்.

14.8 லிட்டர் தாய்ப்பால் பாட்டில்களுடன் அவர் விமானத்தில் ஏற லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அதிகாரிகளோ அதிகபட்சமாக 100 மில்லி லிட்டர் நீரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என கூறி 14.8 லிட்டர் தாய்ப்பால் பாட்டில்களை வாங்கி குப்பையில் போட்டுவிட்டனர்.

தனது மகனின் 2 வார கால உணவு குப்பைக்கு போனதை பார்த்த ஜெசிகா ஆத்திரம் அடைந்து இது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். ஹீத்ரூ விமான நிலைய இணையதளத்தில் திரவங்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்தால் மட்டுமே பால் மற்றும் உணவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A US mother of two has spoken of her frustration that she was forced to dump 14.8 litres of breast milk at security at London’s Heathrow Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X