For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் சிக்கிய சென்னைக்கு உதவி செய்ய தயார்.... அமெரிக்கா உறுதி

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கனமழையால் சிதைந்து போயுள்ள சென்னை மாநகரத்துக்கு உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா அரிவித்துள்ளது.

வரலாறு காணாத கனமழையில் சென்னை சிக்கியது உலகையே உலுக்கியுள்ளது. இந்த பெருவெள்ளம் குறித்து கன வாஷிங்டனில் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:

இந்தியாவின் சென்னை மக்களுக்கு துணையாக உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. தமிழ்நாடும் இந்திய அரசும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள சேதத்தை எதிர்கொண்டு உள்ளது.

US offers assistance for Chennai flood victims

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெள்ளத்தில் சிக்கி தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களை பற்றியே எங்களது சிந்தனை உள்ளது. இந்த கடினமான நேரத்தில் உதவி அளிப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம்.

உதவி கேட்டு இந்தியாவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அவசர கால நெருக்கடிகளை சமாளித்துக்கொள்ளக்கூடிய வளர்ச்சி பெற்ற நாடுதான் இந்தியா.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளோம்.

இவ்வாறு மார்க் டோனர் தெரிவித்தார்.

English summary
The US has expressed its deepest condolences to the families of the people affected by the worst floods in Chennai and has offered assistance to address the humanitarian challenge especially in the case of strong partners like India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X