For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போனை அன்லாக் செய்ய இறந்தவரின் கைரேகை வேண்டும்.. இறுதிச்சடங்கிற்கு விரைந்த அமெரிக்க போலீஸ்

செல்போன் ஒன்றின் லாக்கை திறக்க, இறந்த நபரின் கைரேகையை அமெரிக்க போலீஸ் பெற்று இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: செல்போன் ஒன்றின் லாக்கை திறக்க, இறந்த நபரின் கைரேகையை அமெரிக்க போலீஸ் பெற்று இருக்கிறது.

புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட லுனிஸ் ஃபிளிப் என்ற நபரின் கைரேகையை பெறுவதற்காகவே போலீஸ் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது.

இது மிகவும் முக்கியமான போலீஸ் விசாரணை என்பதால், இறுதிச்சடங்கில் சென்று ஐபோனை அன்லாக் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் போலீசுக்கு, இறுதி சடங்கில் பல அதிர்ச்சிகள் காத்து இருந்தது.

போலீஸ் என்கவுண்டர்

போலீஸ் என்கவுண்டர்

ஃபிளிப் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் வேகமாக சென்ற போது, போலீஸ் அவரை துரத்தி இருக்கிறது. ஆனால் அவர் என்ன குற்றம் செய்தார், ஏன் போலீஸ் அவரை துரத்தியது என்று கூறவில்லை. கடைசியில் அவர் காரை மறைத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளது. ஆனால் அவர் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து அவர் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்.

போலீசை விசாரணை

போலீசை விசாரணை

அவரை எதற்காக கைது செய்தோம் என்ற விவரங்கள் அவரது ஐபோனில் இருப்பதாக போலீஸ், துறை ரீதியான விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த செல்போனை கைப்பற்றிய போலீஸ், ஃபிளிப் கை ரேகையை எடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. ஃபிளிப் கைரேகை மூலம் மட்டுமே செல்போன் லாக்கை திறக்க முடியும் என்பதால், ஃபிளிப்பின் இறுதி சடங்கிற்கு சென்றுள்ளனர்.

வேலை செய்யவில்லை

வேலை செய்யவில்லை

இறுதிச்சடங்கில் அவரது உடலை அடக்கம் செய்யும் முன் சரியாக சென்று, ஃபிளிப் கைரேகையை அவரது மனைவியிடம் கேட்டு இருக்கிறார். முதலில் அனுமதிக்காத ஃபிளிப்பின் மனைவி பின் கைரேகையை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இறந்து போன ஃபிளிப்பின் கைரேகையை வைத்தும் அந்த போனின் லாக் திறக்கவில்லை.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இதனால் தற்போது போலீஸ் இன்னும் பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. ஏற்கனவே ஃபிளிப் ஏன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க போலீசின் துறை ரீதியான விசாரணையில் பதில் அளிக்கவில்லை. இப்போது ஃபிளிப்பின் இறுதி சடங்கை வேறு அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக வழக்கு தொடுக்க இருப்பதாக ஃபிளிப்பின் மனைவி தெரிவித்துள்ளார்.

English summary
US police went to the funeral to get a dead man named Lunis Philip's fingerprint to unlock I Phone. Police needed the fingerprint for the investigation, but anyhow they couldn't open the phone using his fingerprint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X