For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்

Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த நாட்டு எல்லையை கடந்து வடகொரியா நாட்டு எல்லை கிராமம் சென்று அங்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன்னை சந்தித்தார். பகையாளிகளாக சண்டை போட்டு வந்த டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் பங்காளிகளாக மாறியுள்ளதை வரலாற்று மிக்க சந்திப்பாக உலகமே போற்றுகிறது.

வட கொரியா அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதாவது நம்மூர் நாட்டமைகள் பாசையில் சொல்வதென்றால், அவங்க தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அவங்கள ஊரை விட்டு ஒதுக்கிவச்சுட்டோம்.யாரும் அன்னம் தண்ணி ஆகாரம் பொலங்க கூடாது என்பது தான் உலக நாட்டாமை அமெரிக்காவின் உத்தரவு. மீறி புழங்கினால் அவங்களை ஒதுக்கிவைச்சுருவாங்க.. அதுதாங்க பொருளாதார தடை.

இந்த பொருளாதார தடையை பற்றி எல்லாம் கலைப்படாத வடகொரியா, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளியான தென்கொரியாவை அச்சுறுத்தும் வண்ணம் அடிக்கடி அணு ஆயுதசோதனை நடத்தி வந்தது.

மிரட்டிய டிரம்ப்

மிரட்டிய டிரம்ப்

இதற்கிடையில் அமெரிக்க அதிபரான டொனால்ட டிரம்ப், அதாங்க புதிய உலக நாட்டமையாக அவதாரம் எடுத்த டிரம்ப், இங்க பாரப்பா உடனே நீ ஒழுங்கா இருக்கப்பாரு.. இல்லாடி உன் நாட்டையே காலி செஞ்சுடுவேன் என்ற தோனியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை மிரட்டினார். பதிலுக்கும் கிம்மும் லேசாக விடவில்லை. டிரம்பை கடுமையாக விமர்சித்தார். இதனால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

கோபத்தில் டிரம்ப் கொந்தளிப்பு

கோபத்தில் டிரம்ப் கொந்தளிப்பு

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென சிங்கப்பூரில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் சுமூகமாகப் போனாரகள். பின்னர் திரும்பவும் வடகொரியா வேலையைக் காட்டவே டிரம்ப் கோபத்தில் கொந்தளித்தார்.

கிம்மை சந்திக்க விருப்பம்

கிம்மை சந்திக்க விருப்பம்

இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில், சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடத்தி விட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன். அங்கு நான் இருக்கும்போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதை பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

எல்லையை கடந்த டிரம்ப்

எல்லையை கடந்த டிரம்ப்

கிம்முக்கு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை நல்ல யோசனை என வரவேற்ற வட கொரியா அமெரிக்க அதிபரை வரவேற்க தயாரானது. அதன்படி தென்கொரியா வந்த டிரம்ப் அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசினார். பின்னர் டிரம்ப் சொன்னது போலவே வடகெரியா மற்றும் தென்கொரியாவின் எல்லைகளை பிரிக்கும் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பன்முஞ்சோம் என்ற கிராமத்திற்கு தென்கொரிய அதிபருடன் சென்றார்.

எல்லையில் சந்திப்பு

அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கை குலுக்கினார். ஹலோ சொன்னார். பின்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருந்தார்.

English summary
US President Donald Trump meets North Korean leader Kim Jong-un in Demilitarized zone between North Korea and South Korea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X