For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேடிவந்த ஜோபைடன்! பிரதமர் மோடியின் தோளை தட்டி கைக்குலுக்கி வாழ்த்து! ஜெர்மனியில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் நடக்கும் ஜி7 உச்சிமநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நடந்து வந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

Recommended Video

    தேடிவந்த ஜோபைடன்! பிரதமர் மோடியின் தோளை தட்டி கைக்குலுக்கி வாழ்த்து! ஜெர்மனியில் நெகிழ்ச்சி

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி7 கூட்டமைப்பாக உள்ளன. பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள் ஆண்டு தோறும் உச்சிமாநாடு நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஜி7 உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை ஒரு கரும்புள்ளி! ஜெர்மனிவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சுஇந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை ஒரு கரும்புள்ளி! ஜெர்மனிவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

    ஜெர்மனியில் பிரதமர் மோடி

    ஜெர்மனியில் பிரதமர் மோடி

    இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். மேலும் ஜெர்மனி வாழ் இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பிறகு நேற்று முனிச் நகரில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

    குழு போட்டோ எடுத்து கொண்ட தலைவர்கள்

    குழு போட்டோ எடுத்து கொண்ட தலைவர்கள்

    இந்த ஆண்டுக்கான 2 நாள் ஜி7 மாநாடு ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நேற்று துவங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து குழு போட்டோ எடுத்து கொண்டார். அதன்பிறகு தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி பேசி கொண்டிருந்தனர்.

    மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய ஜோபைடன்

    மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய ஜோபைடன்

    அப்போது அங்கு நின்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நடந்து வந்தார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தோளை தட்டி அழைத்தார். நரேந்திர மோடி திரும்பி பார்க்கவே கையை நீட்டி ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜோபைடனின் தோளை தட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    அமெரிக்கா வல்லரசு நாடாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனே தானாக சென்று பிரதமர் நரேந்திர மோடியின் தோளை தட்டி கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தது பெருமையாக பார்க்கப்படுகிறது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    US President Joe Biden walked up to Prime Minister Narendra Modi to greet him ahead of the G7 Summit at Schloss Elmau in Germany.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X