For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் நடத்த டிரம்ப் பிளான்.. கடைசியில் ரத்து.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்

    நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்த இருந்த பேச்சுவார்த்தை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா மிக நீண்ட போரை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் உட்பட தீவிரவாத இயக்கங்களை அழிப்பதற்காக இந்த போரை அமெரிக்கா நடத்தி வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் தற்போதும் அமெரிக்காவின் 11 ஆயிரத்திற்கும் அதிகமான படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கும் மேலாக இந்த போர் நடந்து வருகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த நிலையில் இந்த நீண்ட போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களாக முயன்று வருகிறார். அவரின் திட்டப்படி ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் சமாதானம் பேசி, அவர்கள் சரண் அடைய செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப பெற வேண்டும், ஆப்கானிஸ்தான் அரசுடன் தனியாக ஒப்பந்தங்களை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

    என்ன செய்கிறார்

    என்ன செய்கிறார்

    இதற்காக சால்மா காலிஸாத் என்ற ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க தூதரை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு ஆகியவற்றுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 10க்கும் அதிகமான கூட்டங்களை அவர் நடத்திவிட்டார்.

    தாலிபான் எப்படி

    தாலிபான் எப்படி

    இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தாலிபான் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்ய முடிவு எடுத்தார். தாலிபான், ஆப்கானிஸ்தான் அரசு இரண்டு அமைப்புகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, சமாதானம் செய்யலாம் என்று டிரம்ப் முடிவு எடுத்தார். இதற்கான தேதிகள் குறிக்கப்பட்டது.

    கூட்டம்

    கூட்டம்

    அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் இதற்கான சந்திப்பு கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முக்கியமான அரசு கூட்டங்கள், அமைதி ஒப்பந்தங்கள் இங்குதான் நடக்கும். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

    மீட்டிங்

    மீட்டிங்

    அதில், முக்கியமான தாலிபான் தலைவர்கள், மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோர் உடன் தனி தனியாக ரகசியமாக இன்று கேம்ப் டேவிட் பகுதியில் ஆலோசனை நடத்தலாம் என்று இருந்தேன். இன்று இரவு அவர்கள் இதற்காக அமெரிக்கா வருகிறார்கள். ஆனால் இந்த சந்திப்பை நான் ரத்து செய்துவிட்டேன்.

    ரத்து

    காபூலில் கடந்த வாரம் தாலிபான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொளல் முடியாது. அதனால் நான் இந்த சந்திப்பை ரத்து செய்கிறேன். வன்முறையின் மூலம் அமைதியான ஒப்பந்தங்களை செய்ய முடியாது.

    காரணம் என்ன

    வன்முறையை செய்து, மக்களை கொன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாது. அது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும். அவர்கள் மக்களை கொன்று, இந்த ஒப்பந்தத்தில் தங்களின் கையை உயர்த்திக் கொள்ள பார்க்கிறார்கள், அது நடக்காது, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    ஷாக்கிங் முடிவு

    தாலிபான் உடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டிரம்ப் ஏன் திடீர் என்று இப்படி முடிவு செய்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் இனிமேலும் தொடருமா என்று இதனால் கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    US President Trump cancels his meeting with Taliban after Kabul Attack Claim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X