For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிடன் வந்தால் சிக்கல்.. அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக குதிக்கும் சீன அரசியல்வாதிகள்.. டிவிஸ்ட்

அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் மீண்டும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று சீனாவை சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், கோடீஸ்வரர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் மீண்டும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று சீனாவை சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், கோடீஸ்வரர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கே இது ஆச்சர்யமாக முடிந்துள்ளது.

அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். உலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது.

தோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது? தோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது?

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள இந்த நிலையில் சீன எதிர்ப்புதான் தேர்தல் களத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவிற்கு கடிவாளம் போடக்கூடிய நபர்தான் அமெரிக்காவின் அதிபராக அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சீனாவை மிக கடுமையாக டிரம்ப் எதிர்த்து வருகிறார். கடந்த 3 வருடமாக வர்த்தக போர் காரணமாக சீனாவை டிரம்ப் எதிர்த்தார். அதன்பின் கொரோனா காரணமாக சீனாவை டிரம்ப் எதிர்த்தார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

அதன்பின் கொரோனா பரவலுக்கு காரணமே சீனாதான் என்று டிரம்ப் கூறினார். இதெல்லாம் போக பிடனுக்கு பின் சீனா இருக்கிறது. ஜோ பிடன் வெற்றிபெற வேண்டும் சீனா உழைக்கிறது. இது சீனாவின் சதி. சீனாவை எதிர்க்கும் சக்தி கொண்ட ஒரே ஆள் நான்தான் என்று டிரம்ப் கூறி வருகிறார். இதனால் எனக்கு வாக்களியுங்கள், நான் சீனாவை தண்டிப்பேன் என்று டிரம்ப் சொல்லாமல் சொல்லி வருகிறார்.

ஆனால் நிலைமை

ஆனால் நிலைமை

ஆனால் இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் மீண்டும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று சீனாவை சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், கோடீஸ்வரர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆம், பிடனை விட அதிபர் டிரம்ப் வெற்றிபெறுவதுதான் தங்களுக்கு சரியாக இருக்கும் என்று சீனாவை சேர்ந்த அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் காரணங்களையும் கூறியுள்ளனர்.

பிடன் ஸ்டிரிக்ட்

பிடன் ஸ்டிரிக்ட்

பிடன் அதிபராக தேர்வானால் சீனா பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்கிறார்கள். பொதுவாக பிடனும் அவரின் ஜனநாயக கட்சியும் உலக அளவில் நட்புகளை, உறவுகளை பேணிக்காப்பதில் சிறப்பானவர்கள். இதனால் பிடன் ஆட்சிக்கு வந்தால் அவர் உலக நாடுகளை எளிதாக சீனாவிற்கு எதிராக திரட்டுவார். தனது நட்பு மூலமும், கட்சியின் கொள்கை மூலமும் சீனாவின் நட்பு நாடுகளை கூட சீனாவிற்கு எதிராக திருப்புவார்.

டிரம்ப் எதுவும் செய்ய மாட்டார்

டிரம்ப் எதுவும் செய்ய மாட்டார்

ஆனால் டிரம்ப் அப்படி செய்ய கூடிய நபர் இல்லை. டிரம்ப் உடன் உலக நாடுகள் அவ்வளவு எளிதாக சேராது. முக்கியமாக வலதுசாரி கொள்கை கொண்ட அவருடன் இடதுசாரி கொள்கை கொண்ட வேறு யாரும் சேர வாய்ப்பே இல்லை. இதனால் டிரம்ப் கடைசி வரை பேசுவாரே ஒழிய சீனாவிற்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட வாய்ப்பு இல்லை. சீனா இதனால் டிரம்பை அதிகம் விரும்புகிறது.

வளர விடாது

வளர விடாது

அதேபோல் முன்பு ஜனநாயக கட்சி சார்பாக ஒபாமா ஆட்சி செய்த போது சீனாவை பெரிய அளவில் வளர விடவில்லை. சீனா உலகம் முழுக்க ஏற்றுமதி செய்தாலும் கூட, அமெரிக்காதான் உலக நாடுகளை கட்டுப்படுத்தி வந்தது. டிரம்ப் ஆட்சியின் போது அந்த நிலைமை இல்லை. அமெரிக்காவிடம் இருந்த சாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சீனா பக்கம் செல்ல தொடங்கி உள்ளது. உலகின் பிக்பாஸாக சீனா மாற தொடங்கி உள்ளது.

ஆனால் பிடன்

ஆனால் பிடன்

ஆனால் பிடன் வந்தால் மீண்டும் அமெரிக்கா மேலே வந்துவிடும். தன்னுடைய ராஜாங்க பேச்சுவார்த்தை மூலம் பிடன் மீண்டும் உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார். இது சீனாவிற்கு ஆபத்தாக முடியும். இதனால் டிரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும் என்று சீனா நினைக்கிறது. அதோடு டிரம்பின் மோசமான பொருளாதார கொள்கை காரணமாக அமெரிக்கா தானாக சீர்குலையும் என்று சீனா நினைக்கிறது.

சீனாவின் திட்டம்

சீனாவின் திட்டம்

நாங்கள் எதுவும் செய்யாமல் தானாகவே அமெரிக்காவின் பொருளாதாரம் குலையும். டிரம்ப் எல்லா நாடுகளுடன் சண்டை போட்டு வருகிறார்.கண்டிப்பாக அமெரிக்காவால் டிரம்பின் ஆட்சியின் கீழ் முன்னேற முடியாது என்று சீனா நினைக்கிறது. உள்நாட்டு பிரச்சனைகள் வேறு தலைதூக்க தொடங்கி உள்ளது. பிடன் வந்தால் கண்டிப்பாக இருப்பார். சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று சீன அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.

 வேறு சில காரணம்

வேறு சில காரணம்

அதோடு டிரம்ப் மீண்டும் வந்தால் விட்ட இடத்தில் இருந்தே வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். அதுதான் இரண்டு நாட்டு உறவுக்கு நல்லது என்று சீனா நினைக்கிறது. பிடன் வெற்றிபெற்றால் இரண்டு நாட்டு உறவு மேலும் பாதிக்கும். மிக மோசமான நிலையை இரண்டு நாட்டு உறவு அடையும். அதனால் டிரம்ப் மீண்டும் வெற்றிபெறுவதே நல்லது என்று சீனா நினைக்கிறது.

English summary
US Presidential elections: China prefers Trump than strict Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X