For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்... வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது.

அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் முதலில் தொடங்கிய வாக்குப் பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தின் வடகோடியில் அமைந்துள்ள டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற சிற்றூரில் முதல் வாக்குப் பதிவு தொடங்கியது. 20க்கும் குறைவானவர்களே வாழும் இந்த ஊரில் உள்ள வாக்களர்கள் 8 பேரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உடனடியாக இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி ஹிலரிக்கு 4 பேரும் டிரம்புக்கு இருவரும் வாக்களித்தனர். அந்த வகையில் முதல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ஹிலரி வெற்றிப் பெற்றுள்ளார்.

நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தில் டிக்ஸ்வில்லி நாட்ச் உள்ளிட்ட 2 இடங்களில் டிரம்ப் 32 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். ஹிலரி 25 வாக்குக்களை பெற்றுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருக்கின்றனர். மேற்குப் பகுதியில் இனிமேல்தான் வாக்குப் பதிவு தொடங்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The most expected US Presidential election has been started today morning in the east and central America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X