For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்ணை தொட்ட சாதனை.. 665 நாட்கள் விண்வெளியில் கழித்த 57 வயது பெக்கி விட்சன்!

விண்வெளியில் 288 நாட்கள் தங்கி பணியாற்றிய பெக்கி விட்சன் சனிக்கிழமை பூமிக்கு திரும்பியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

நியூயார்க் : 665 நாட்களை விண்வெளியில் கழித்து புதிய வரலாற்று சாதனையை புரிந்த பெக்கி விட்சன் கடந்த சனிக்கிழமை பூமிக்கு திரும்பினார்.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது பெண்மணி பெக்கி விட்சன் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இவர் அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றியுள்ளார். பெக்கி தனது பயணத்தை முடித்து விட்டு சனிக்கிழமை பூமிக்கு திரும்பினார்.

சனிக்கிழமை திரும்பினார்

சனிக்கிழமை திரும்பினார்

பெக்கி உள்பட 3 விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் வீடியோக்களை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சோயுஸ் விண்கலம் கஜகஸ்தானில் தரையிறங்கிய சோயுஸ் விண்கலத்தில் இருந்து பெக்கி விட்சனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

665 நாட்கள் சாதனை

விட்சன் இதற்கு முன் விண்வெளி ஆய்வகத்துக்கு 2 தடவை கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2002ம் ஆண்டு மற்றும் 2007- 2008 வரை என இரண்டு முறை சுமார் 534 நாட்களை விண்வெளியில் செலவிட்டுள்ளார் விட்சன். இவர் தன் வாழ்நாளில் 655 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார்.

எட்டாவது பெண்மணி

உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில் பெக்கி விட்சன் 8வது இடத்தை வகிக்கிறார். விட்சனுடன் வந்த ரஷ்ய விண்வெளி வீரர் ஃயோடர் யர்ச்சிகின் 673 நாட்கள் விண்வெளியில் செலவிட்டு ஏழாவது இடத்தில் உள்ளார். மேலும் விண்வெளி ஆய்வகம் சென்ற நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் பெக்கி விட்சன் பெற்றுள்ளார்.

பெருமை

உலகின் மிக வயதான விண்வெளிப் பெண் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளியில் நடக்கும் பெண்மணி என்ற பெருமையையும் விட்சன் பெற்றுள்ளார். வேற்றுகிரகங்களுக்குச் சென்று விண்வெளி ஆய்வு நடத்துவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், தொடர்ந்த இந்தப் பணியில் ஈடுபடப் போவதாகவும் கூறினார்.

English summary
US Woman Peggy Whitson has now spent a total of 665 days in space, including two previous ISS missions in 2002 and 2007-2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X