For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது மலேசியாவுக்குள் இருக்கிறதா சிங்கப்பூர்? அமெரிக்காவின் அறிக்கையால் சர்ச்சை

சிங்கப்பூரை மலேசியாவின் அங்கம் என அமெரிக்கா குறிப்பிட்டது சர்ச்சையாகிவிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை- வீடியோ

    கோலாலம்பூர்: மலேசியாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சையானது. பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் இது திருத்தப்பட்டது.

    அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சக இணைய தளத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    US State Dept thinks Singapore is in Malaysia

    அதில் இடம் என்கிற பகுதியில் ஜேடபிள்யூ மாரியோட், சிங்கப்பூர், மலேசியா என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மலேசியாவின் ஒரு அங்கம் சிங்கப்பூர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தன. ஒருநாள் முழுவதும் இப்பிழை திருத்தப்படவில்லை. மறுநாள் இன்றுதான் இந்த பிழை திருத்தப்பட்டிருக்கிறது.

    மலேசியாவுடன் இணைய 1963-ம் ஆண்டு ஒப்புதல் தெரிவித்த சிங்கப்பூர் 1965-ல் பிரிந்து தனிநாடானது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The US State Department seems to think that Singapore is still part of Malaysia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X